அரசு, தனியார் நிறுவனங்களுக்கு பேருந்து வசதி - மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

"தனியார் தொழிற்சாலைகளும் பேருந்து சேவைக்கு அணுகலாம்"

அரசு, தனியார் நிறுவனங்களுக்கு பேருந்து வசதி - மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
கோப்புப்படம்
  • Share this:
சென்னையில் அரசு மற்றும் தனியார் நிறுவனப் பணியாளர்களுக்கு பேருந்து வசதி தேவைப்பட்டால் தங்களை அணுகலாம் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டிருப்பதால், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இயங்கத் தொடங்கினாலும், பணியாளர்கள் செல்வதற்கு வசதியாக மின்சார ரயில் மற்றும் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இந்நிலையில், மத்திய, மாநில துறைகள் மற்றும் நிறுவனங்களின் பணியாளர்களுக்கு பேருந்து வசதி தேவைப்பட்டால், 9445030503, 9445030523 ஆகிய செல்போன் எண்களிலும், edp.mtc@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அணுகலாம் என மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.


இதேபோல், தனியார் தொழிற்சாலைகளும் பேருந்து சேவைக்கு அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...

சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: May 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading