Home /News /coronavirus-latest-news /

திருமழிசை தற்காலிக காய்கறி சந்தைக்கு சிறப்புப் பேருந்தை இயக்க ஆலோசனை...!

திருமழிசை தற்காலிக காய்கறி சந்தைக்கு சிறப்புப் பேருந்தை இயக்க ஆலோசனை...!

கோப்புப் படம்

கோப்புப் படம்

சிறு வியாபாரிகள் தொலைதூரம் பகுதியிலிருந்து வரக்கூடியவர்கள் போக்குவரத்து வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை திருமழிசை தற்காலிக காய்கறி சந்தைக்கு சிறப்பு பேருந்தை இயக்க சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் ஆலோசனை செய்து வருகிறது.  ஏற்கனவே அரசு ஊழியர்களுக்காக 200 சிறப்புப் பேருந்துகளை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் இயங்கி வருகிறது.

பல்வேறு சிறு வியாபாரிகள் போக்குவரத்து வசதி வேண்டி சிஎம்டிஏ அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர். பெரும்பாலும் காய்கறி வாங்குவதற்கு லாரி, வேன், ஆட்டோ போன்ற வாகனங்கள் வருகிறது. ஆனால் சிறு வியாபாரிகள் தொலைதூரம் பகுதியிலிருந்து வரக்கூடியவர்கள் போக்குவரத்து வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர்.

எனவே சில குறிப்பிட்ட பகுதியிலிருந்து வியாபாரிகளுக்கு மட்டும் பேருந்து வசதி ஏற்பாடு செய்வும், அடையாள அட்டை தந்தால் இன்னும் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியுமென்றும் கோரிக்கை வைத்துள்ளனர் . இதுதொடர்பாக சிஎம்டிஏ அதிகாரிகள் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திடம் ஆலோசித்து முடிவு செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

Also see...






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Published by:Vaijayanthi S
First published:

Tags: Koyambedu, Lockdown

அடுத்த செய்தி