ஹோம் /நியூஸ் /கொரோனா /

corona death| டெல்டா பிளஸ் வைரசுக்கு முதல் மரணம்- 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டும் 63 வயது பெண் பலி

corona death| டெல்டா பிளஸ் வைரசுக்கு முதல் மரணம்- 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டும் 63 வயது பெண் பலி

மாதிரிப்படம்.

மாதிரிப்படம்.

இந்தியாவின் கொரோனா 2-வது அலையில் நாட்டையே புரட்டிப் போட்ட டெல்டா வகை கொரோனா அல்லாமல் புதிய உருமாறிய கொரோனா வகையான டெல்டா பிளஸ் வைரஸுக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல் மரணம் ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இந்தியாவின் கொரோனா 2-வது அலையில் நாட்டையே புரட்டிப் போட்ட டெல்டா வகை கொரோனா அல்லாமல் புதிய உருமாறிய கொரோனா வகையான டெல்டா பிளஸ் வைரஸுக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல் மரணம் ஏற்பட்டது.

மும்பையில் 63 வயதுடைய பெண்மணி ஜூலை 27ம் தேதி டெல்டா பிளஸ் வைரசுக்கு பலியானதாக மும்பை நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த 63 வயது பெண் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டவர், எங்கும் பயணமும் மேற்கொள்ளவில்லை. ஆனால் இவருக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்தது, கொரோனா வைரஸ் தாக்கும் முன்பே இவர் நோய்வாய்ப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு ஜூலை 21ம் தேதி கொரோனா பாசிட்டிவ் என்று தெரியவந்தது. ஜூலை 27ம் தேதி மரணமடைந்தார்.

இவரது வைரஸ் சாம்பிள்கலின் மரபணு வரிசையை இப்போதுதான் மும்பை கார்ப்பரேஷன் பெற்றது, அதில் டெல்டா பிளஸ் வேரியண்ட் தான் இவரது மரணத்துக்கு காரணம் என்பது தெரியவந்தது.

இதற்கிடையே இவரது குடும்பத்தினர் 6 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளது. இந்த 6 பேரில் 2 பேருக்கு டெல்டா பிளஸ் வேரியண்ட் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மீதி 4 பேர் ரிப்போர்ட் இன்னும் வரவில்லை. டெல்டா பிளஸ் பாதித்த 2 பேரின் உடல்நிலை சீராக உள்ளது.

டெல்டா பிளஸ் வகை கவலையளிக்கும் கொரோனா வகை என்று மத்திய அரசு ஏற்கெனவே கூறியுள்ளது.

இதற்கிடையே இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40,120 புதிய கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளன. இதில் கேரளா மாநிலத்தில் 21,445 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர், 208 பேர் மரணமடைந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மகாராஷ்டிராவில் 24 மணி நேரத்தில் 6,388 புதிய கொரோனா கேஸ்கள் பதிவாகின, 160 பேர் மரணமடைந்துள்ளனர்,

First published:

Tags: Corona death, Delta+ variant