கொரோனாவுக்கு எதிரான போர் - விளக்கேற்றி ஆதரவு அளித்த முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் குழுமத் தலைவரான முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீடா அம்பானி ஆகியோர், #LightforIndia என்னும் ஒற்றுமையின் ஒளிக்கான பிரதமரின் அழைப்புக்கு ஆதரவளித்து பிரார்த்தித்தனர்.

கொரோனாவுக்கு எதிரான போர் - விளக்கேற்றி ஆதரவு அளித்த முகேஷ் அம்பானி
விளக்கேற்றிய முகேஷ் அம்பானி மற்றும் நிடா அம்பானி
  • Share this:
கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடும் சிரமங்களைப் பொறுத்து பொது மக்களும், அரசும் கொரோனாவை எதிர்த்து போராடி வருகிறது.

கொரோனாவுக்கு எதிரான போரில் ஆதரவை தெரிவிக்கும் வகையில் ஏப்ரல் 5, ஞாயிறன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்களை மின் விளக்குகளை அணைத்து, விளக்குகளை ஏற்றுமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனால் இந்தியர்கள் பெரும்பாலானவர்களின் வீடுகளில் விளக்கு ஏற்றப்பட்டு ஆதரவு தெரிவித்த நிகழ்வு நேற்று நடந்தேறியது.

9 நிமிடங்களுக்கு மின் விளக்குகள் அணைக்கப்பட்டமுகேஷ் அம்பானி வீடு, ஆண்டிலியா, ஆல்டமவுண்ட் சாலை, மும்பை

ரிலையன்ஸ் குழுமத் தலைவரான முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீடா அம்பானி ஆகியோர், தங்களது வீட்டில் விளக்கேற்றி ஆதரவு அளித்தனர்.

நாடு முழுவதும், #LightsforIndia என்னும் இந்த நம்பிக்கை தெரிவிக்கும் நிகழ்வில் பொதுமக்கள் பலரும் ஆதரவு அளித்துள்ளனர்.


இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: April 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading