நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் உடல்நிலை கவலைக்கிடம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் உடலை நிலை மோசமடைந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் உடல்நிலை கவலைக்கிடம்
வசந்த குமார் எம்.பி
  • News18
  • Last Updated: August 28, 2020, 8:37 PM IST
  • Share this:
கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமார். இவருக்கு வயது 70, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பால் நுரையீரலில் தொற்று அதிகாரித்தது. மேலும், நுரையிரலில் சளி அதிகமானதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பாடார்.



Also read... மற்ற நோய்களின் தாக்கம் அதிகரிப்பே கொரோனா உயிரிழப்பு உயர காரணமா? மருத்துவர்கள் விளக்கம்


வயது மூப்பு காரணமாகவும், சக்கரை நோய் பாதிப்பு உள்ளிட்ட மற்ற நோய் பிரச்சனை இருந்ததன் காரணமாகவும் நோயின் வீரியம் அதிகரித்து நுரையிரல் செயலிழக்கும் அளவிற்கு சென்றது.

இதைத்தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக செயற்கை சுவாச உதவியுடன் சுயநினைவு இழந்த நிலையில் அவருக்கு சிகிச்சை தொடரப்பட்டு கொண்டு இருக்கிறது. இன்று மேலும் அவரது உடலை மேசமடந்து கவலை அளிக்கும் நிலையில் உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

UPDATE: எம்.பி. வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி இன்று மாலை 6.56 க்கு காலமானார்
First published: August 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading