• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • மக்களைக் காப்பாற்றுவதில் அக்கறை காட்டவேண்டிய அரசு மதுக்கடைகளை திறப்பது அதிர்ச்சியளிக்கிறது: கனிமொழி

மக்களைக் காப்பாற்றுவதில் அக்கறை காட்டவேண்டிய அரசு மதுக்கடைகளை திறப்பது அதிர்ச்சியளிக்கிறது: கனிமொழி

டாஸ்மாக் ஆர்ப்பாட்டத்தில்  கனிமொழி

டாஸ்மாக் ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி

திமுக தலைவர் தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். மருத்துவர்களுக்கு சரியான உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை. அதனால் அவர்கள் நோய் தொற்றால் அதிக அளவில் பாதிப்படைகின்றனர்.

  • Share this:
    மக்களை காப்பாற்றுவதில் அக்கறை காட்ட வேண்டிய அரசாங்கம் மதுக்கடைகளை திறப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். 

    தமிழக அரசு மக்கள் உயிரை துச்சமாக நினைத்து டாஸ்மாக் கடைகளைத் திறந்து குடும்ப வன்முறை அதிகரிக்க காரணமாகவும், உணவின்றி தவிக்கும் ஏழை எளிய மக்களிடம் இருக்கக்கூடிய ஒரு சில பணத்தை வைத்து மதுபான கடைகளில் செலவழிக்கும் ஒரு அவல நிலையை உருவாக்கியிருக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று கூறியிருக்கிறார்.

    திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி, சி.ஐ.டி காலனியில் தனது இல்லம் முன்பாக கருப்பு சின்னம் அணிந்து மதுக்கடைகள் திறப்புக்கு எதிராக, தமிழக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    அதில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் மதுக்கடைகளை திறக்காதே... தமிழக அரசே.. தமிழக அரசே.. மக்கள் வாழ்வை சீரழிக்கும் மதுக்கடையை திறக்க போன்ற முழக்கத்தை முழங்கி கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாநிலத் துணைச் செயலாளர் குமாரி விஜயா சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் துரை, 119 மாவட்ட கழக செயலாளர் கே பிரபு, மயிலாப்பூர் மகளிர் அணி அமைப்பாளர் ரேவதி மற்றும் நிர்வாகிகள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    உலகமே கொடிய நோயால் பாதிக்கப்பட்டு, அதை தடுப்பதற்கு எல்லா நாடுகளும் முயற்சி எடுத்துக்கொண்டு போராடிக் கொண்டிருக்கின்றது. இந்த சூழலில் இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை அரசாங்கம்  காப்பாற்றுவதில் அக்கறை காட்டாமல் மருத்துவர்களை பாதுகாக்க அக்கறை எடுத்துக்கொள்ளாமல் இப்பொழுது மதுக்கடைகளை திறப்பதில்  முனைப்பு காட்டிக் கொண்டிருப்பது அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது என்று கனிமொழி கூறினார்.

    கொரொனா தொற்று வராமல் பாதுகாப்பது மிக முக்கியமாகும். இடைவெளி என்பது யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஒரு சூழலை உருவாக்கிக் கொள்ள வேண்டிய நேரம். இந்த தருணத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்து குடும்ப வன்முறை அதிகரிக்கவும், ஏழை எளிய மக்கள் பொருளாதார சீரழிவுக்கு செல்லும் வகையில் அரசு நடந்து கொள்கிறது.

    திமுக தலைவர் தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். அதிலும் மருத்துவர்களுக்கு சரியான உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வில்லை. அதனால் அவர்கள் நோய் தொற்றுக்கு அதிக அளவில் பாதிப்படைகின்றனர். மேலும் தூய்மைப் பணியாளர்கள் காவல்துறையினரும் நோய் தொற்றுக்கு ஆளாகி பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் அவர்களை பாதுகாக்க அரசு தவறிவிட்டது இதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அவர்  தெரிவித்தார்.

    Also see...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: