கொரோனா வைரஸ் வருகிறது... 8 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த நெட்டிசன் - டிவிட்டரில் வைரல்

முன்பே கணித்த நெட்டிசன்

மக்களை வதைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல் குறித்து நெட்டிசன் ஒருவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு பதிவிட்ட டிவிட்டர் ஒன்று வைரலாகி வருகின்றது.

  • Share this:
2019 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக உலகை ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்கு பின் என மக்களின் வாழ்க்கை நிலை மாறியுள்ளது. சானிடைசர், மாஸ்க் ஆகியவை கட்டாயம் பயன்படுத்தவேண்டிய அன்றாட பொருட்களாக மாறிவிட்டன. இந்த ஆபத்தில் இருந்து மீண்டுவருவதற்கான சாத்தியக் கூறுகளை கண்டுபிடிக்க உலகம் முழுவதும் உள்ள அறிவியலாளர்கள் இரவுபகலாக ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நெட்டிசன் ஒருவர் 8 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா வைரஸ் வருகை குறித்து பதிவிட்டுள்ள டிவிட்டர் தற்போது வைரலாகியுள்ளது. மேக்ரோ அக்ரோட் (@Marco_Acorte) என்ற நெட்டிசன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கொரோனா வைரஸ் வந்து கொண்டிருக்கிறது (Corona VIrus on the way) என 2013 ஆம் ஆண்டு டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதன்பின்பு டிவிட்டரில் ஆக்டிவாக இல்லாத அவர், கடைசியாக 2015 ஆம் ஆண்டு சிரிக்கும் ஸ்மைலியை பகிர்ந்துள்ளார்.

ALSO READ : உடலின் ஆக்சிஜன் அளவை எளிதாக தெரிந்து கொள்ள பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவியை பயன்படுத்துவது எப்படி?

அவரின் இந்தப் பதிவை பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், கொரோனா வைரஸ் பரவல் குறித்து துல்லியமாக 8 ஆண்டுகளுக்கு முன்பே அவர் பதிவிட்டது எப்படி? என வினவி வருகின்றனர். அதேநேரத்தில், தற்போது வேகமாக பரவிக்கொண்டிருக்கும் சார்ஸ் கோவிட் 2 வைரஸ் குறித்து அந்த நெட்டிசன் குறிபிட்டிருக்க வாய்ப்பில்லை என்றும், மரபணு ரீதியாக பல்வேறு வைரஸ்களை கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் ஒட்டுமொத்த குடும்பம் குறித்து அவர் பதிவிட்டிருக்கலாம் எனவும் பலர் விளக்கமளித்துள்ளனர்.

 

  

கடந்த ஆண்டு இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்சர் 2015 ஆம் ஆண்டு பதிவிட்ட டிவிட்டர் வைரலானது. அந்த டிவிட்டில், ஒரு நாள் ஓடுவதற்கு எங்குமே இடம் இருக்காது, அந்த நாள் வந்துகொண்டிருக்கிறது என கூறியிருந்தார். கொரோனா வைரஸ் பாதிப்பை மறைமுகமாக அவர் எழுதியாக கூறி நெட்டிசன்கள் ஆர்ச்சரின் டிவிட்டை டிரெண்ட் செய்தனர். ஆனால், அவருக்கு முன்பாக கொரோனா வைரஸ் பெயரை நேரடியாக பதிவிட்ட மேக்ரோ அக்ரோட்டின் டிவிட் தற்போது டிரெண்டில் இடம்பிடித்துள்ளது.

ALSO READ :  காற்றில் பரவும் கொரோனா; 6 அடிக்கு மேல் பரவலாம் - அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம்

அதேபோல் சீனா ஆராய்ச்சியாளர்கள் கோவிட் சார்ஸ் குறித்து 5 ஆண்டுகளுக்கு முன்பு விவாதித்ததாக ஆய்வுக் கட்டுரை ஒன்று தெரிவித்துள்ளது விவாதபொருளாக மாறியுள்ளது . The Unnatural Origin of SARS and New Species of Man-Made Viruses as Genetic Bioweapons’ என பெயரிடப்பட்ட அந்த ஆய்வுக் கட்டுரையில், மூன்றாவது உலகப் போர் உயிரியியல் ஆயுதமாக இருக்கும் என்றும், சார்ஸ் வைரஸ் முக்கிய ஆயுதமாக மாறும் என்றும் சீன ஆய்வாளர்கள் 2015 ஆம் ஆண்டு யூகித்ததாக தெரிவித்துள்ளது. கோவிட் வைரஸ் பரவலில் உலக நாடுகள் சீனாவை சந்தேகித்து வரும் நிலையில், இந்த ஆய்வுக் கட்டுரை அந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
Published by:Sankaravadivoo G
First published: