தாய்ப்பால் வழங்கும் போது மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும்...! 'பாசிடிவ்' தாய்மார்களுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தல்

"குழந்தைகளிடமிருந்து பெரியவர்களுக்கு தொற்று ஏற்பட்டதாக இது வரை ஆய்வுகள், உதாரணங்கள் இல்லை. எனவே குழந்தைக்கு தொற்று இருந்தாலும் தொடர்ந்து தாய்ப்பால் வழங்க வேண்டும்"

தாய்ப்பால் வழங்கும் போது மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும்...! 'பாசிடிவ்' தாய்மார்களுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தல்
மாதிரி படம்
  • Share this:
கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் தங்கள் பச்சிளங்குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்கும் போது மாஸ்க் அணிவது கட்டாயம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

தாய்ப்பாலின் மூலம் கொரோனா பரவாது, இது வரை உலக அளவில் இதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடையாது. பொதுவான காய்ச்சல், சளி, மலேரியா, பிற நோய்கள் தாய்மார்களுக்கு இருந்தாலும் பெரும்பாலான நேரங்களில் தாய்ப்பால் வழங்குவதில் பிரச்னை இல்லை என்றே மருத்துவர்கள் அறிவுறுத்தி வந்துள்ளனர்.

அதே போன்று கொரோனாவும் தாய்ப்பால் மூலம் பரவாது என்று கூறுகின்றனர். ஆனால் குழந்தையை மிக நெருக்கத்தில் வைத்து தாய்ப்பாலூட்டும் போது தாயின் மூக்கு, வாய் மூலமாக குழந்தைக்கு கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் உண்டு. எனவே மாஸ்க் அணிந்து கொண்டு தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.


சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை இயக்குநர் விஜயா இது குறித்து நம்மிடம் பேசும் போது, "இந்த மருத்துவமனையில் இது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 15 கர்பிணி பெண்களுக்கு பிரசவமாகியுள்ளது. அனைவரது குழ்ந்தைகளுமே அவர்களின் தாய்மார்களிடம் தான் நேரடியாக பாலூட்டப்படுகின்றன. பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்துவதிலும் சிக்கல் உள்ளது. அதை ஒவ்வொரு முறையும் சரியாக கழுவ வேண்டும்.

கொரோனா பாதிக்கப்படாதவர் ஒருவர் இதை செய்ய வேண்டும். எனவே தாயிடம் நேரடியாக பால் குடிப்பது தான் பாதுகாப்பானது. ஆனால் வேறு வழிகளில் குழந்தைக்கு கொரோனா பரவாமல் இருக்க தாய்மார்கள் மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும். பாலூட்டும் நேரம் தவிர மற்ற நேரங்களில் குழந்தையிடமிருந்து விலகி இருப்பது நல்லது" என வழங்கலாம்.

தாய் சேய் இருவருக்கும் கொரோனா, தாய்க்கு மட்டும் கொரோனா அல்லது குழந்தைக்கு மட்டும் கொரோனா என எப்படி இருந்தாலும் தாய்ப்பால் ஊட்டுவது அவசியம், இல்லையென்றால் குழந்தைக்கு பாக்டீரியாக்களால் தொற்று ஏற்படலாம் என்கிறார் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் பச்சிளங்குழந்தைகள் பிரிவு தலைமை மருத்துவர் சீனிவாசன்."தாய்ப்பால் மூலம் கொரோனா பரவும் வாய்ப்புகளை விட, தாய்ப்பால் கொடுக்காததால் குழந்தைக்கு ஏற்படும் பாதிப்புகள் தான் அதிகம். மார்பை சப்புவது மூலம் ஒரு வைரஸ் பரவும் என்று எந்த ஆய்வும் இது வரை இல்லை. கை கழுவுதல், மாஸ்க் அணிதல், மார்புகளை சுத்தமாக வைத்திருத்தல் மூலம் பாதுகாப்பாக தாய்ப்பாலூட்ட முடியும்" என்கிறார்.

திருச்சியில் சில வாரங்களுக்கு முன் ஒரு வயது குழந்தைக்கு தந்தையிடமிருந்து கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. ஆனால் குழந்தையின் தாய்க்கு தொற்று இல்லை. இது போன்ற சூழல் மிக அரிதானது என கூறும் மருத்துவர் சீனிவாசன், " குழந்தைகளிடமிருந்து பெரியவர்களுக்கு தொற்று ஏற்பட்டதாக இது வரை ஆய்வுகள், உதாரணங்கள் இல்லை. எனவே குழந்தைக்கு தொற்று இருந்தாலும் தொடர்ந்து தாய்ப்பால் வழங்க வேண்டும்" என்கிறார்.


Also see...
First published: May 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading