• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா பரவல் முடிந்தாலும் வழக்கமான விமானப் பயணம் இருக்காது. ஆய்வு சொல்வது என்ன?

கொரோனா பரவல் முடிந்தாலும் வழக்கமான விமானப் பயணம் இருக்காது. ஆய்வு சொல்வது என்ன?

கோப்புப்படம்

கோப்புப்படம்

பல்வேறு நாடுகளில் கணிக்க முடியாத எல்லை மூடல் மற்றும் குழப்பமான பாதுகாப்பு நெறிமுறைகள் மக்கள் பயணத்தில் ஆர்வம் காட்டாததற்கு மற்றொரு காரணம்.

  • Share this:
கொரோனா தொற்று முடித்தாலும் பெரும்பாலான மக்கள் வழக்கமான பயணத்தை மேற்கொள்ளமாட்டார்கள் என்பதை இன்மர்சாட் நிறுவனம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, குழப்பமான சோதனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக பெரும்பாலான வணிகங்களை விர்ச்சுவல் மூலம் நடத்த முடியும் என்பதை உணர்ந்து கொள்வது, கொரோனா வைரஸ் தொற்றுநோய் இல்லாமல் போனால் கூட பலர் தங்கள் வழக்கமான பயண நடைமுறைகளை மீண்டும் தொடங்கத் திட்டமிடவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது என தெரிவித்துள்ளது.

லண்டனை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் நடத்திய ஆய்வு அறிக்கையை கடந்த 10ம் தேதி வெளியிட்டது. அடிக்கடி விமான பயணம் மேற்கொள்ளும் சுமார் 10,000 விமானிகளிடம் இந்த ஆய்வினை நடத்தியது. அதன்படி, உலகளவில் 83% பயணிகள் தங்கள் பழைய பயணப் பழக்கவழக்கங்களுக்குள் திரும்பத் தயங்குகிறார்கள் என்றும், 31% பேர் விமானம் மூலம் குறைவாகவே பயணிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளது. நோய்த்தொற்று குறித்த பயம் காரணமாக ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் கால் பகுதியினர் மட்டுமே ஆறு மாதங்களுக்குள் மீண்டும் பறக்க போதுமான நம்பிக்கையுடன் இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சர்வதேச எல்லைகள் மூடப்பட்டன. அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிபவர்களை தவிர்த்து, உலக மக்கள்தொகையில் பெரும்பகுதியினர், தொலைதூரத்தில் இருந்து வேலை செய்யத் தள்ளப்பட்டனர். அதனால் நிறுவனங்கள் தற்போது வைரஸின் பொருளாதார தாக்கத்திலிருந்து விலகிச் செல்வதால், பயணம் உள்ளிட்ட வரவு செலவுத் திட்டங்களையும் குறைத்துள்ளன. பல நிறுவனங்களின் உற்பத்தித்திறன் உண்மையில் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக மக்கள் எப்போதும் அலுவலகத்தில் இருக்க வேண்டிய அவசியம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.இது குறித்து, இன்மர்சாட் ஏவியேஷனின் உலகளாவிய விற்பனையின் துணைத் தலைவர் கிறிஸ் ரோஜர்சன் கூறியதாவது, "நாம் நம் வீடுகளில் நீண்ட நேரம் அமர்ந்திருக்கிறோம், விர்ச்சுவல் மூலம் இப்போது நாம் வியாபாரம் செய்ய மிகவும் பழக்கமாகிவிட்டோம். இந்த தொடர்புகள் அதிக டிஜிட்டலாக இருப்பதால் நம் வணிகப் பயணம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிடும். மேலும் விமான நிறுவனங்கள் இதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்" என்று கூறினார்.

டிஜிட்டல் கண்டுபிடிப்புகள்

இது விமான நிறுவனங்களுக்கு மோசமான செய்தியைச் கொடுத்துள்ளது. கார்ப்பரேட் பயணமானது சிறந்த விமான நிறுவனங்களுக்கு 55% முதல் 75% வரை லாபத்தை ஈட்ட முடியும். இருப்பினும் இது 10% பயணிகளுக்கு மட்டுமே காரணமாக இருக்கலாம். ஏனெனில் வணிக பயணிகள் உயர் வகுப்பு அல்லது திருப்பிச் செலுத்தக்கூடிய கட்டண வகுப்புகளை வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கொரோனா கட்டுப்பாடுகளால் அடிப்படை திறன்களை இழக்கும் குழந்தைகள் - ஆய்வில் வெளியான தகவல் என்ன?

ஏற்கனவே உலகளவில் விமான நிறுவனங்கள் நூறாயிரக்கணக்கான ஊழியர்களை வேலையை விட்டு நிறுத்திவிட்டன. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டில் தொழில் இழப்புகள் 84 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்று சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

தொற்று பயம் அதிகமாக இருப்பதால் மீண்டும் விமானத்தில் பறக்க தயக்கம் அதிகம் உள்ளவர்களுக்கு, டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் முக்கியமானதாக இருக்கும் என இன்மர்சாட்டின் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

மேலும், தொடர்பு இல்லாத கேட்டரிங் சேவைக்கு உணவை முன்கூட்டியே ஆர்டர் செய்யும் திறன், தனிப்பட்ட சாதனம் வழியாக தொடர்பு கொள்ளாத பொழுதுபோக்குகளை வழங்குதல், தொடர்பு இல்லாத கட்டண அமைப்புகள் மற்றும் முக அங்கீகார தொழில்நுட்பம் போன்ற விஷயங்களும் அவற்றில் அடங்கும். பல்வேறு நாடுகளில் கணிக்க முடியாத எல்லை மூடல் மற்றும் குழப்பமான பாதுகாப்பு நெறிமுறைகள் மக்கள் பயணத்தில் ஆர்வம் காட்டாததற்கு மற்றொரு காரணம் என்று கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.இது குறித்து மேலும் பேசிய ரோஜர்சன், விமானத்தில் கிளாசிக் தொடர்பு புள்ளிகள் காலப்போக்கில் உருவாகும் என்றும், இது விமான பயண அனுபவத்தை பாதுகாப்பானதாக்குவதில் பெரிய பங்கு வகிக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், மக்கள் இந்த டிஜிட்டல் உலகில் தள்ளப்படுகிறார்கள். அவர்கள் இந்த வடிவத்தில் தங்களை இணைக்கப் பழகிவிட்டார்கள் என்று கூறினார்.

2019ம் ஆண்டில் நாங்கள் பார்த்த அதே அளவிலான பயணத்தை சாத்தியமாக்குவதற்கு பல விஷயங்கள் ஒன்றிணைய வேண்டும். விமான நிலையத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்களை எவ்வாறு சிறப்பாக நிர்வகிக்க முடியும் என்பதில் அரசாங்கங்களும் பெரும் பங்கு வகிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: