ஜெர்மனி இறைச்சி தொழிற்சாலையில் 730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

ஜெர்மனியின் மிகப்பெரிய இறைச்சித் தொழிற்சாலையில் பணிபுரியும் 730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனி இறைச்சி தொழிற்சாலையில் 730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..
ஜெர்மனி இறைச்சி ஆலை
  • Share this:
ஜெட்மனியில் அமைந்துள்ள வெஸ்ட்பாலியா மாவட்டத்தில் அமைந்துள்ள இறைச்சி தொழிற்சாலையில் 730 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஜெர்மனியில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க தொழில்துறையில் துணை ஒப்பந்தக்காரர்களை ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. துணை ஒப்பந்தக்காரர்கள் பெரும்பாலும் புலம் பெயர் தொழிலாளர்களைக் கொண்டு பணிகளைச் செய்வதால் அவர்களை ஒரே இடத்தில் தங்க வைக்கின்றனர்.

இதனால் புதிய கிளஸ்டர்கள் உருவாகின்றன. இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும், வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா (Rhine-Westphalia) மாநிலத்தில் அமைந்துள்ள டோனிஸ் குழுமத் தொழிற்சாலையில் 730 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.மேலும் படிக்க...

தமிழகத்தில் 10 மாவட்ட நீதிமன்றங்களைத் திறக்கலாம் - உயர்நீதிமன்றம் அனுமதி..இது ஜெர்மனியை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதுகுறித்துப் பேசிய ஜெர்மனியின் வேளாண் அமைச்சர் ஜூலியா க்ளோக்னர் (Julia Kloeckner), நோய்த் தொற்றின் தொடக்கம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார். மேலும் மக்கள்அனைவரையும் பாதுகாப்பாகவும் சமூக இடைவெளியுடனும் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
First published: June 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading