Home /News /coronavirus-latest-news /

சம்பளம் எப்போ தருவீங்க? சென்னைா மாநகராட்சி தற்காலிக ஊழியர்கள் போராட்டம்!

சம்பளம் எப்போ தருவீங்க? சென்னைா மாநகராட்சி தற்காலிக ஊழியர்கள் போராட்டம்!

நாளை சம்பளம் வழங்கப்படும் என தினசரி சொல்கின்றனர். எப்பொழுது சம்பளம் வழங்கப்படும்? என்று சென்னை மாநகராட்சிக்கு மட்டுமே தெரியும் என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

சென்னை வளசரவாக்கம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மண்டல அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சியால் தற்காலிகமாக பணியாற்றி வரும் 16,000 சிறப்பு ஊழியர்களுக்கு இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை. சுகாதாரத்துறை சார்பில் ஒவ்வொரு வீடுகளிலும் நேரடியாக ஊழியர்கள் சென்று உடல்நிலை குறித்து விசாரிப்பதற்கு சென்னை மாநகராட்சி சார்பில் 16000 ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டனர்.

கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து பணியாற்றக்கூடிய அவர்கள் மாதம் இறுதியில் சம்பளம் தருவதாக கூறி இருந்தனர். ஆனால் தற்பொழுது வரை சம்பளம் வழங்கப்படவில்லை. இதில் பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்கள் வீட்டில் வேலை செய்யக்கூடிய நபர்களுக்கு, வேலை இல்லாத காரணத்தால் தாங்கள் வேலைக்கு சென்று சம்பளம் பெறுவதற்கு இதுபோன்ற ஆபத்தான வேலைகளை செய்து வருகின்றனர்.

ஆனால், அவர்கள் செய்யும் பணிக்கான ஊதியத்தை சரியான நேரத்தில் வழங்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து மண்டல அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்களின் வங்கிக்கணக்கில் ஊதியம் வழங்கப்பட்டுவிடும் என்றும் தங்களுக்கு அதுகுறித்து தெரியாது என்றும் கூறினர்.

நாளை சம்பளம் வழங்கப்படும் என தினசரி சொல்கின்றனர். எப்பொழுது சம்பளம் வழங்கப்படும்? என்று சென்னை மாநகராட்சிக்கு மட்டுமே தெரியும் என்று வேதனையுடன் தெரிவித்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டு அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தாமல் போலீசாரை வைத்து கலைக்க செய்தனர்.

Also see...

சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Published by:Vaijayanthi S
First published:

Tags: CoronaVirus

அடுத்த செய்தி