தெருக்களிலும், வீடுகளிலும் இருந்து கண்டெடுக்கப்பட்ட 400-க்கும் அதிகமான சடலங்கள்

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கொரோனா தாண்டவமாடி வருகிறது. 5 நாட்களில் 400-க்கும் அதிகமான சடலங்கள் தெருக்களிலும், வீடுகளிலும் இருந்து மீட்கப்பட்டுள்ளன

தெருக்களிலும், வீடுகளிலும் இருந்து கண்டெடுக்கப்பட்ட 400-க்கும் அதிகமான சடலங்கள்
சாலையில் கிடக்கும் கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலம் (Photo: Business Insider)
  • News18
  • Last Updated: July 22, 2020, 8:28 AM IST
  • Share this:
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 48 லட்சத்தை கடந்தது. நோய் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6.14 லட்சத்தை தாண்டியது.

அதிகபட்சமாக அமெரிக்காவில் 39 லட்சத்து 70 ஆயிரம் பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அங்கு ஒரு லட்சத்து 44 ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளனர். பிரேசிலில் 21 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கும், இந்தியாவில் 11 லட்சத்து 60 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கும், ரஷ்யாவில் 7 லட்சத்து 83 ஆயிரம் பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 86 லட்சத்து 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். கொரோனா பரிசோதனையை வேகப்படுத்தியுள்ள நாடுகளில், அதிகம் பாதிப்பு கண்டறியப்பட்டாலும் சிகிச்சை முறைகள் காரணமாக அவர்கள் குணமடைய ஒரு வாய்ப்பு உள்ளது.


ஆனால், தற்போது வரை பல நாடுகளில் குறைவான அளவிலான பரிசோதனைகளே மேற்கொள்ளப்படுகிறது. இதனால், கொரோனா சமூகப்பரவலாக உருவெடுத்து, பாதித்தவர்களுக்கு சிகிச்சை போய்ச் சேராததால் அவர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.

தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் முக்கிய நகரங்களில் கடந்த 5 நாட்களில், தெருக்கள் மற்றும் வீடுகளில் இருந்து 400-க்கும் அதிகமான சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவர்களில் 85 சதவிகிதம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை கூறுகிறது. எனினும், பரிசோதனைகள் முடியும் வரை சந்தேக மரணம் என்றே அரசு குறிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


படிக்க: மரத்தை வெட்டி சிபிஐ அதிகாரியிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட சாத்தான்குளம் காவல் ஆய்வாளர்

படிக்க: புதுக்கோட்டை அருகே 108 ஆம்புலன்சில் நடந்த பிரசவம் - அழகான ஆண் குழந்தை பிறந்தது

படிக்க: த்ரிஷாவுடன் திருமணமா? நடிகர் சிம்பு தரப்பு விளக்கம்
Cochabamba மாநகரப்பகுதியில் மட்டும் 191 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 11 லட்சம் மக்கள் தொகையை கொண்ட பொலிவியாவில் தற்போது வரை 2,200 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
First published: July 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading