கடலூர் மருந்து ஆலையில் ஒரே நாளில் 40-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று

மருந்து தொழிற்சாலையை 15 நாட்களுக்கு மூடக் கோரி ஆலை நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு குடிகாடு ஊராட்சி தலைவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

கடலூர் மருந்து ஆலையில் ஒரே நாளில் 40-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று
கோப்புப் படம்
  • Share this:
கடலூர் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலையில் 40 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சிப்காட் வளாகத்தில் மருத்துவதுறை சார்ந்த மருந்து உற்பத்தி ஆலையில் 20-க்கும் மேற்பட்டோருக்கு அண்மையில் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது.

இதில், 40-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தொற்று உறுதியானதை அடுத்து அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, மருந்து தொழிற்சாலையை 15 நாட்களுக்கு மூடக் கோரி ஆலை நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு குடிகாடு ஊராட்சி தலைவர் கடிதம் அனுப்பியுள்ளார்.


Also read... டெங்கு பாதிப்பு ஏற்படுத்தினால் ₹ 10 லட்சம் வரை அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை



சிப்காட் வளாகத்தில் 30-க்கும் அதிகமான தொழிற்சாலைகள் இயங்கி வரும் நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
First published: August 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading