• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • நாகர்கோவிலில் 300 பேர் கலந்து கொண்ட போலீஸ் எஸ்.ஐ திருமணம் - மண்டபத்திற்கு சீல்

நாகர்கோவிலில் 300 பேர் கலந்து கொண்ட போலீஸ் எஸ்.ஐ திருமணம் - மண்டபத்திற்கு சீல்

நாகர்கோவில் அருகே ஊரடங்கு விதிகளை மீறி நடத்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளரின் திருமணத்தில் 300-க்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டதால் 202 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மேல தர்மபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வலத்தி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது தந்தை சுயம்பு ஓய்வுபெற்ற காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக இருந்தவர்.

    Also see:

     

    இந்நிலையில், மணமக்கள் கார்த்திக்- சண்முகப்பிரியா இவர்களது திருமணம் இருளப்பபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கொரோனா தடை உத்தரவு காலமென்பதால் மண்டபங்களில் திருமணம் நடத்த இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

    எனினும் இந்த திருமண வைபவத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு கிடைத்த புகாரின் பேரில், ஆர்.டி.ஓ., மயில் தலைமையில் அதிகாரிகள், திருமண மண்டபத்திற்கு சீல் வைத்தனர். அதனைத் தொடர்ந்து கோட்டார் போலீசார் முதற்கட்டமாக திருமண மண்டப உரிமையாளர், திருமணம் நடத்திய இரு வீட்டார் என 202 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: