திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் தனியார் மண்டபத்தில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இதில் ஆரணி கோட்டாச்சியர் பூங்கொடி தலைமை வகித்தார். மேலும் ஆரணி நகர பேரமைப்பு வியாபாரி சங்கம் ஆரணி அனைத்து நகர வியாபாரி சங்கங்கள் ஓன்றுணைந்து இந்த கொரோனா தடுப்பூசி முகாமில் பங்கேற்றனர். இதில் 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தானாக முன்வந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர்.
முன்னதாக கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளும் வியாபாரிகளுக்கு ரத்த கொதிப்பு, சர்க்கரை வியாதி உள்ளிட்ட பரிசோதனை மேற்கொண்டனர். அதன் பிறகுதான் ஆரணி வட்டார மருத்துவ குழு வியாபாரிகளுக்கு தடுப்பூசி செலுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியை ஆரணி நகர வியாபாரி சங்கம் மற்றும் அனைத்து வியாபார சங்கத்தினர் முன் நின்று நடத்தினர்.
தமிழகத்தில் கடந்த 17 நாட்களில் சுமார் ஒரு லட்சம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் நோய் தொற்றால் 333 பேர் பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: மோகன்ராஜ், ஆரணி
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.