• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • சூழ்நிலைக்கு ஏற்ப மேலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்படும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி

சூழ்நிலைக்கு ஏற்ப மேலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்படும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி

முதலமைச்சர் பழனிசாமி (கோப்புப் படம்)

முதலமைச்சர் பழனிசாமி (கோப்புப் படம்)

தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டு சூழ்நிலைக்கு ஏற்ப மேலும் தளர்வுகள் அளிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

  • Share this:
    இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற "ஒளிரும் தமிழ்நாடு" என்ற காணொளி மாநாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத், ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் மற்றும் துறை செயலாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் சூழ்நிலைக்கு ஏற்ப மேலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார் முதல்வர்.

    இந்திய தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்டோர் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்புக்கு தேவையான மருந்துகளை தயாரிக்க சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டதால் தமிழகத்தில் பல்வேறு நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கியிருப்பதாகக் குறிப்பிட்டார்.

    இதன்மூலம் பேரிடர் காலத்தில் நாட்டிற்கே தமிழக மக்களின் திறன் உறுதுணையாக இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார். தமிழகம் இயல்பு நிலையை நோக்கி படிப்படியாக முன்னேறி வருவதாகக் கூறிய அவர், தொழில்துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக இருக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

    மேலும் படிக்க...

    ஆரணியில் பைக்கில் சென்றவர்கள் மீது மிளகாய் பொடி துாவி கத்தியால் குத்தியவர்களுக்கு வலைவீச்சு

     






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: