கன்னியாகுமரி கொரோனா வார்டில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இன்றும் ஒருவர் மரணம்...!

கன்னியாகுமரி கொரோனா வார்டில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இன்றும் ஒருவர் மரணம்...!
  • News18
  • Last Updated: March 29, 2020, 7:31 AM IST
  • Share this:
கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று காலை உதயகுமார் என்பவர் உயிரிழந்துள்ளார்.

கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது, கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பவர்கள் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த, எஸ்தர் ராணி 59, ஜான் 49 மற்றும் ஜெகன் 49 ஆகியோர் அடுத்தடுத்து உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர்.

இவர்கள் அனைவரது ரத்த பரிசோதனை அறிக்கையில் கொரோனா இல்லை என்று முடிவு வந்தது. இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 2 வயது குழந்தை உட்பட மூவர் இதே வார்டில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மரிய ஜான் 66, ராஜேஸ் 24, அருள் பெர்னோ 2 ஆகியோர் உயிரிழந்தது வெவ்வேறு உடல்நலக்குறைவு என்று சுகாதாரத்துறை கூறியது.


சுகாதாரத்துறையினர் நேற்று வெளியிட்ட விளக்க அறிக்கை


இவர்களுக்கான கொரோனா பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், இன்று காலை வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த சாமிநாதபுரத்தைச் சேர்ந்த உதயகுமார் உயிரிழந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலையில் உயிரிழந்துள்ளார்.

இதன் மூலம், அம்மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.




இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: March 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading