பாதிப்பு அதிகம் ஆண்களுக்கா, பெண்களுக்கா...? ; சென்னையில் கொரோனா - ஒரு முழு அலசல்!

சென்னையில் ஆண்கள் 68.78% பேரும், பெண்கள் 31.22% பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பாதிப்பு அதிகம் ஆண்களுக்கா, பெண்களுக்கா...? ; சென்னையில் கொரோனா - ஒரு முழு அலசல்!
கோப்புப்படம்
  • Share this:
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் ஆண்களுக்கா, பெண்களுக்கா என்பது குறித்த ஒரு முழு அலசல்.

சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 211 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில், 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 18 பேர் குணமடைந்து உள்ளனர்.

அதன்படி, சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 63 பேரும், திருவிக நகரில் 30 பேரும், கோடம்பாக்கத்தில் 24 பேரும்,  அண்ணாநகரில் 22 பேரும்,  தடையார்ப்பேட்டையில் 19 பேரும், தேனாம்பேட்டையில் 16 பேரும் உள்ளனர். மேலும், பெருங்குடி மற்றும் அடையாறில் 7 பேரும், வளசரவாக்கத்தில் 5 பேரும், திருவொற்றியூரில் தலா 4 பேரும், மாதவரத்தில் 3 பேரும், ஆலந்தூரில் 3 பேரும், சோழிங்கநல்லூரில் 2 பேரும் உள்ளனர்.


உயிரிழந்தவர்கள் ராயபுரத்தில் 3 பேரும், திருவிக நகரில் 1 நபரும், தண்டையார்பேட்டையில் 1 நபரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குணம் அடைந்தவர்கள் ராயபுரத்தில் 1 நபரும், கோடம்பாக்கத்தில் 5 நபரும், அண்ணாநகரில் 7 பேரும், தேனாம்பேட்டையில் 1 நபரும், அடையாறில் 1 நபரும், வளசரவாக்கத்தில் 2 நபரும், ஆலந்தூரில் 1 நபரும் உள்ளனர்.

சென்னையில் மணலி மற்றும் அம்பத்தூரில் இது வரை கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்கள் யாரும் இல்லை.

மண்டலம் வாரியாக மொத்தம் உயிரிழந்தவர்கள் குணமடைந்தவர்கள்: திருவொற்றியூர் - 4 - 0 - 0

மணலி - 0 - 0 - 0

மாதவரம் - 3 - 0 - 0

தண்டையார்பேட்டை - 19 - 1 - 0

ராயபுரம் - 63 - 3 - 1

திருவிக நகர் - 30 - 1 - 0

அம்பத்தூர் - 0 - 0 - 0

அண்ணாநகர் - 22 - 0 - 7

தேனாம்பேட்டை - 16 - 0 - 1

கோடம்பாக்கம் - 24 - 0 - 5

வளசரவாக்கம் - 5 - 0 - 2

ஆலந்தூர் - 3 - 0 - 1

அடையார் - 7 - 0 - 1

பெருங்குடி - 7 - 0 - 0

சோழிங்கநல்லூர் - 2 - 0 - 0

சென்னையில் ஆண்கள் 68.78% பேரும், பெண்கள் 31.22% பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். வயது வாரியாக பார்க்கையில், அதிகபட்சமாக 30 முதல் 39 வயது வரை உள்ள நபர்கள் 44 பேருக்கு தொற்று உள்ளது. குறைந்தபட்சமாக 9 வயதுக்கு கீழும், 80 வயதுக்கு மேலும் தலா ஒருவர் மட்டும் பாதித்து உள்ளனர்.

வயது - பாதித்தோர் எண்ணிக்கை

0-9 = 1
10-19 = 14
20-29 = 32
30-39 = 44
40-49 = 39
50-59 = 39
60-69 = 21
70-79 = 13
80 + = 1

Also see...











சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: April 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading