Home /News /coronavirus-latest-news /

மக்கள் பிரதிநிதிகள் ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம்: கேரள முதல்வர் பினராயி விஜயன்..!

மக்கள் பிரதிநிதிகள் ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம்: கேரள முதல்வர் பினராயி விஜயன்..!

பினராயி விஜயன்

பினராயி விஜயன்

ரூ. 20,000 கீழ் உள்ள பணியாளர்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது - நிதியமைச்சர் தாமஸ் ஐசக்

    கேரளாவில் மக்கள் பிரதிநிதிகளுக்கு அடுத்த ஒருவருடத்திற்கு மாத ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

    திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா வைரஸின் தாக்கம் இந்திய பொருளாதாரத்தில் பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று அச்சம் தெரிவித்தார். நுகர்வோர் மாநிலம் என்ற வகையில் கேரளாவில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் கூறினார். எனவே, பொருளாதார நெருக்கடியை ஈடுகட்டும் வகையில், மக்கள் பிரதிநிதிகளுக்கு அடுத்த ஒருவருடத்திற்கு மாத ஊதியம் மற்றும் சிறப்பு ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என்றார்.

    இதேபோன்று அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் 6 நாள் ஊதியம் வீதம் அடுத்த 5 மாதங்களுக்கு பிடித்தம் செய்யப்படும் என்றும் பினராயி விஜயன் கூறினார். அதேநேரம், 20 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் உள்ள பணியாளர்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என்று மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்தார்.

    பொருளாதாரம் மேம்படும் பட்சத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை மீண்டும் திருப்பி வழங்க கேரள அரசு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    Also see...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: CoronaVirus, Kerala, Pinarayi vijayan

    அடுத்த செய்தி