அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் மோடி இன்று ஆலோசனை!

காணொலி காட்சி மூலம் நடக்கும் இந்த ஆலோசனையானது இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் மோடி இன்று ஆலோசனை!
பிரதமர் மோடி
  • Share this:
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் இன்று காலை ஆலோசனை நடத்துகிறார்.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்து வருகின்றனர். இதில்  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

இதனால் இந்தியாவில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு கடந்த 24-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.


காணொலி காட்சி மூலம் நடக்கும் இந்த ஆலோசனையானது காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் தங்கள் மாநில நிலை குறித்து பிரதமருக்கு விளக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also see...



இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.






First published: April 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading