புதுச்சேரி, கேரள நர்ஸ்கள்: அஸ்ஸாம் மாநில பாரம்பரிய துண்டு - மோடி கொரோனா தடுப்பூசி போடும்போது பிரதிபலித்த தேர்தல் மாநிலங்கள்

புதுச்சேரி, கேரள நர்ஸ்கள்: அஸ்ஸாம் மாநில பாரம்பரிய துண்டு - மோடி கொரோனா தடுப்பூசி போடும்போது பிரதிபலித்த தேர்தல் மாநிலங்கள்

தடுப்பூசி போட்ட செவிலியர்களுடன் மோடி

பிரதமர் மோடிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் புதுச்சேரியைச் சேர்ந்த செவிலியரும், கேரளாவைச் சேர்ந்த செவிலியரும் கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.

 • Share this:
  தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் தொடங்கியது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. நாடு முழுவதும் சுமார் 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 1.15 கோடி பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

  இந்த நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இன்று டெல்லியுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று பிரதமர் மோடியும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அவருக்கு கோவேக்சின் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. மோடிக்கு, புதுச்சேரியைச் சேர்ந்த செவிலியர் நிவேதாவும், கேரளாவைச் சேர்ந்த மற்றொரு செவிலியரும் தடுப்பூசி செலுத்தினர்.

  கொரோனா தடுப்பூசி செலுத்தும்போது அஸ்ஸாம் மாநிலத்தின் பாரம்பரிய துண்டை தோளில் அணிவித்திருந்தார். அந்த துண்டு அஸ்ஸாம் பெண்கள் அவருக்கு பரிசாக வழங்கியது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்குவங்க மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் மூன்று மாநிலங்களை பிரதிபலிக்கும் வகையில் மோடி செயல்பட்டுள்ளார் என்று பார்க்கப்படுகிறது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: