Covid-19 Vaccine| தீவிர கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு, மாடர்னா தடுப்பூசி 100 சதவீதம் பலனளிப்பதாகத் தகவல்.. முழுவிவரம்..
Covid-19 Vaccine | மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தின் சோதனை முடிவுகளை அறிந்து கொண்டபோது, கண்ணீர் சிந்தியதாக அந்நிறுவன தலைமை மருத்துவ அதிகாரி டால் ஸாக்ஸ் (Tal Zaks) கூறியுள்ளார்.

தீவிர கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு 100 சதவீதம் பலனளிக்கும் மாடர்னா தடுப்பூசி..
- News18 Tamil
- Last Updated: December 1, 2020, 8:25 AM IST
கொரோனா வைரஸுக்கு எதிராக உலகின் பல்வேறு நிறுவனங்கள் தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அவற்றில் மூன்றாம் கட்ட சோதனையை எட்டியுள்ள சில நிறுவனங்களில் அமெரிக்காவின் மாடர்னாவும் ஒன்று. மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பு மருந்து தீவிர கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு 100 சதவீதம் பலனளிப்பதாக தற்போது தெரியவந்துள்ளது. மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி நோயைத் தடுப்பதில் 94 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தீவிர நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு 100 சதவீதம் பலனளிப்பதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசியை எடுத்துக் கொண்டவர்களுக்கு தற்காலிக காய்ச்சல் போன்ற சிறு பக்க விளைவுகள் மட்டுமே ஏற்பட்டதாகவும், இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட பலரது உயிரை இந்த மருந்து காப்பாற்றி இருப்பதாகவும் மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பு மருந்தின் முடிவுகளை கண்டபோது முதன்முறையாக தான் கண்ணீர் சிந்தியதாக மாடர்னா நிறுவன தலைமை மருத்துவ அதிகாரி டாம் ஸாக்ஸ் கூறியுள்ளார்.
மேலும் படிக்க...துணி மாஸ்க்குகளை எப்படி துவைக்க வேண்டும்? எவ்வளவு நாள் பயன்படுத்தலாம்? அவசரகால உபயோகத்திற்கு பயன்படுத்துவதற்கான அளவில் சோதனை முடிவுகளை பெற்றிருப்பதால் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் மாடர்னா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு அனுமதிக்குமாறு அந்நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. வரும் டிசம்பர் 17 ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெறவுள்ள கூட்டத்திற்கு பின் தடுப்பூசிக்கு அனுமதி கிடைக்கலாம் என்றும் அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இந்த தடுப்பூசியை எடுத்துக் கொண்டவர்களுக்கு தற்காலிக காய்ச்சல் போன்ற சிறு பக்க விளைவுகள் மட்டுமே ஏற்பட்டதாகவும், இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட பலரது உயிரை இந்த மருந்து காப்பாற்றி இருப்பதாகவும் மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பு மருந்தின் முடிவுகளை கண்டபோது முதன்முறையாக தான் கண்ணீர் சிந்தியதாக மாடர்னா நிறுவன தலைமை மருத்துவ அதிகாரி டாம் ஸாக்ஸ் கூறியுள்ளார்.
மேலும் படிக்க...துணி மாஸ்க்குகளை எப்படி துவைக்க வேண்டும்? எவ்வளவு நாள் பயன்படுத்தலாம்?
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.