கொரோனா தொற்றை கண்டறிய உதவும் நவீன கருவி - ICMR ஒப்புதலுக்காக காத்திருக்கும் சென்னை மருத்துவர்

மருத்துவர் ஜெகதீசன்

கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள இந்த சூழலில், தனது கருவிக்கு ICMR விரைவில் அனுமதி வழங்கினால், கொரோனாவுக்கு எதிரான போரில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும் என்கிறார் மருத்துவர் ஜெகதீசன்.

  • Share this:
ஒரே நிமிடத்தில் கொரோனா தொற்றை கண்டறிய உதவும் நவீன கருவிக்கு, ICMR ஒப்புதல் கிடைக்குமா? என்று காத்திருக்கிறார், அந்தக் கருவியை உருவாக்கிய சென்னை மருத்துவர் ஜெகதீசன்.. இந்தக் கருவிக்கு ICMR ஒப்புதல் அளித்தால், கொரோனா தொற்றை கண்டறியும் முயற்சியில், மிகப்பெரிய மைல் கல்லாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தொற்று ஏற்பட்டவர்களுக்கு 7 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை சிகிச்சை அளிக்க வேண்டும் என்றாலும் கூட, இந்த கொரோனா தொற்றை கண்டறிய ஒருநாள் வரை ஆகிறது. தமிழகத்தில் ஒருவர் இன்று கொரோனா பரிசோதனை எடுத்துக் கொண்டால், அவருக்கு தொற்று உள்ளதா? இல்லையா? என்பது அடுத்த நாள் தான் தெரிவிக்கப்படும்.

ஆனால், சென்னை JK மருத்துவமனை நிறுவனரும், மூத்த மருத்துவருமான ஜெகதீசன், கண்டறிந்துள்ள நவீன கருவி, ஒரே நிமிடத்தில் கொரோனா தொற்றை கண்டறியும் சக்தி மிக்கதாக உள்ளது.

சோதனை முயற்சியாக 487 பேரை பரிசோதத்தில் அவர்கள் அனைவருக்கும் துல்லியமான முடிவுகளை இந்த நவீன கருவி அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா சோதனைக்காக மத்திய, மாநில அரசுகள் கோடிக்கணக்கில் செலவு செய்து வரும் நிலையில், இந்த ஒரு கருவியின் மூலம் அந்த செலவுகளை 80 சதவிகிதம் வரை கட்டுப்படுத்திவிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர் ஜெகதீசனின் முயற்சிக்கு ஓமந்தூரார் மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி உள்ளிட்ட மூத்த மருத்துவர்கள் தங்கள் பங்களிப்பை செலுத்தி உள்ளனர். இந்த நிலையில் தான், இந்தக் கருவிக்கு ICMR-ன் அனுமதி பெற மருத்துவர் ஜெகதீசன் விண்ணப்பித்துள்ளார். கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள இந்த சூழலில், தனது கருவிக்கு ICMR விரைவில் அனுமதி வழங்கினால், கொரோனாவுக்கு எதிரான போரில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும் எனவும் மருத்துவர் ஜெகதீசன் கூறியுள்ளார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ramprasath H
First published: