முகப்பு /செய்தி /கொரோனா / மக்களை வீட்டுக்குள் முடக்கிய கொரோனா... மொபைல் கேம்ஸ் செயலிகளுக்கு திடீர் வருமான வளர்ச்சி!

மக்களை வீட்டுக்குள் முடக்கிய கொரோனா... மொபைல் கேம்ஸ் செயலிகளுக்கு திடீர் வருமான வளர்ச்சி!

pubg

pubg

ஆப்பிள் ஆப் ஸ்டோரில் மொபைல் கேம்ஸ் செயலிகள் பதிவிறக்கம் செய்யப்படுவது 62 சதவிகித வளர்ச்சியைச் சந்தித்துள்ளதாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கொரோனா வைரஸ் பயத்தால் சர்வதேச அளவில் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகள் மட்டுமல்லாது பணியாளர்களுக்கும் நிறுவனங்கள் பல வீட்டில் இருந்தே பணியாற்ற உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மொபைல் கேம்ஸ் செயலிகள் அதிகப்படியாக பதிவிறக்கம் செய்யப்படுகிறதாம். சீனாவில் மட்டும் மொபைல் கேம்ஸ் செயலிகளுக்கான வளர்ச்சி 39 சதவிகிதம் அதிகரித்துள்ளதாம்.

ஆப்பிள் ஆப் ஸ்டோரில் மொபைல் கேம்ஸ் செயலிகள் பதிவிறக்கம் செய்யப்படுவது 62 சதவிகித வளர்ச்சியைச் சந்தித்துள்ளதாம். குறிப்பாக PUBG கேம் செயலியை அதிகப்படியானோர் பதிவிறக்கம் செய்துள்ளனராம். தென் கொரியாவிலும் மொபைல் கேம்ஸ் செயலிகள் அதிகப்படியாகப் பதிவிறக்கம் செய்யப்படுகிறதாம்.

கொரோனா தாக்கத்தால் நஷ்டங்களே இதுவரையில் ஏற்பட்டுக் கொண்டிருந்த நிலையில் இதன் மூலம் கேம் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைத்துள்ளது என வேதனையுடன் தெரிவித்துள்ளார் கேமிங் நிறுவன ஆய்வாளர் ஜெஃப் கொஹென். ஆசிய நாடுகளில் மொபைல் கேம்ஸ் பதிவிறக்கங்கள் கடந்த ஆண்டைவிட இந்த மூன்று மாதங்களில் 46 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாம்.

2019-ம் ஆண்டு மொபைல் கேம்ஸ் பதிவிறக்கங்கள் சர்வதேச அளவில் 2.9 பில்லியனாக இருந்தது தற்போது 4 பில்லியனாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பயம்... மதிப்பிழக்கும் இந்திய ரூபாய்!

First published:

Tags: CoronaVirus