கொரோனாவில் பாதிக்கப்பட்ட செல்போன் உற்பத்தி! திணறும் ஆப்பிள்: சமாளிக்கும் ஜியோமி

கொரோனாவில் பாதிக்கப்பட்ட செல்போன் உற்பத்தி! திணறும் ஆப்பிள்: சமாளிக்கும் ஜியோமி
ஆப்பிள்
  • News18 Tamil
  • Last Updated: February 19, 2020, 10:32 PM IST
  • Share this:
கொரோனா பாதிப்பால், வருமானம் குறையும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ள நிலையில், சாம்சங் மற்றும் ஜியோமி நிறுவனங்கள் வேறு யுக்தியை கையாள தொடங்கியுள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பால், உலகம் முழுவதும் ஐபோன்களின் விலை அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. ஐபோன் உற்பத்தியில் சீனாவின் பங்கு மிகபெரியது. சீனாவில் ஒரு ஐபோனை அசம்பிள் செய்ய 8.5 டாலரை ஆப்பிள் நிறுவனம் செலவு செய்வதாக, பட்ஜெட்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பால், சீனாவில் ஐபோன்களின் உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் மிகக்குறைந்த நேரமே ஆப்பிள் ஷோரூம்கள் திறக்கப்படுகின்றன. ஆப்பிள் நிறுவனம், 4-ம் காலாண்டு வருவாய் 4,82,000 கோடி ரூபாய் என்று இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. இதில் 15 சதவிதம், அதாவது சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் சீனாவில் இருந்து கிடைக்கும் வருவாய். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக ஐபோன் விற்பனை குறைந்து, ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாது என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.


மற்றொரு புறம் சாம்சங் நிறுவனம், தனது உதிரி பாகங்களை, கப்பல் மற்றும் விமானம் மூலம் வியட்னாமிற்கு அனுப்பி அங்கு உள்ள தொழிற்சாலைகளில் செல்போன் உற்பத்தியை அதிகரித்துள்ளது. 2017-ம் ஆண்டில் சாம்சங் மூலம் வியட்நாமிற்கு 4,17,00,000 ரூபாய் வருவாய் கிடைத்தது.

ஆப்பிள் போன்களின் விற்பனை குறையத் தொடங்கும் என்று தகவல்கள் வெளியான நிலையில், சாம்சங் நிறுவனம் தனது உற்பத்தியை அதிகரிக்க முழு முயற்சி மேற்கொண்டுள்ளது. வியட்னாமில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும், அதற்கு குறைந்த வட்டியிலோ அல்லது வட்டியே இல்லாமலோ கடன் வழங்கத் தயாராக இருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இதற்காக சாம்சங் தரப்பில், 15,500 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இருப்பினும் சீனாவில் தயாரிக்கப்படும் GALAXY S20 SERIES உள்ளிட்ட சில ரக போன்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக சாம்சங் தெரிவித்துள்ளது.

ஜியோமி நிறுவனமும் கொரோனா வைரஸ் பிரச்சனையால், செல்போன் மற்றும் உதிரி பாகங்களின் உற்பத்தியை குறைந்துள்ளது. இதன் காரணமாக ஜியோமி போன்களின் விலையும் அதிகரிக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் மற்ற நிறுவனங்களை போல இல்லாமல், ஜியோமி நிறுவனம், கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள பல்வேறு ரகங்களில் N95 என்ற முக கவசத்தை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. சீனாவின் எந்த பகுதியாக இருந்தாலும், இணையத்தில் ஆர்டர் செய்து பாதுகாப்பான N95 ரக முக கவசங்களை பெற்று கொள்ளலாம் என்று இந்நிறுவனம் அறிவித்துள்ளது.Also see:


 
First published: February 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்