கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் திருவாடானை எம்.எல்.ஏ. கருணாஸ் மற்றும் பூம்புகார் எம்.எல்.ஏ. பவுன்ராஜிற்கு கொரோனா உறுதியான நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 23-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு
கருணாஸ்
  • Share this:
உலகம் முழுவதும் பிரபலங்களையும் விட்டுவைக்காமல் கொரோனா கோர தாண்டவமாடிவருகிறது. தமிழகத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், திரைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், திருவாடானைத் தொகுதி எம்எல்ஏவும், நடிகருமான கருணாசுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு அவரின் மெய்காப்பாளருக்கு கொரோனா உறுதியாகியிருந்த நிலையில், பாதிக்கப்பட்ட கருணாஸ் திண்டுக்கல் இல்லத்தில் தனிமைப்படுத்துக்கொண்டார்.

மேலும் , பூம்புகார் அதிமுக எம்எல்ஏ பவுன்ராஜுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.


மேலும் படிக்க...கொரோனா தொற்றால் கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலை மூடல்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், விரைவில் குணமடைந்து வீடு திரும்புவேன் என நம்பிக்கை தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: August 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading