மு.க.ஸ்டாலின் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்

மு.க.ஸ்டாலின் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில், இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

 • Share this:
  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில், இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

  இது குறித்து  ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில், “இரண்டாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசி இன்று எடுத்துக் கொண்டேன். இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ளவும்.

  வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள் எனில் தங்கள் மருத்துவரை கலந்தாலோசனை செய்துவிட்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளவும் நம்மையும், நாட்டு மக்களையும் பாதுகாப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.  இந்நிலையில்,  இந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 3,14,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்புகள் தொடர்பான தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 3,14,835 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

  இதனால் நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,59,30,965 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 22,91,428 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 1,78, 841 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,34,54,880 ஆக அதிகரித்துள்ளது.

  இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலால், புதிய உச்சமாக 2,104 பேர் உயிரந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,84,657 ஆக உயர்ந்துள்ளது.

  Must Read : சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஸ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு

   

  இந்நிலையில், நாடு முழுவதும் இதுவரை 13,23,30,644 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: