ஹோம் /நியூஸ் /கொரோனா /

6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை - மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை - மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

மு.க.ஸ்டாலின், மோடி

மு.க.ஸ்டாலின், மோடி

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  கொரோனா பரவல் நிலவரம் தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக்காட்சி மூலம் பேசுகிறார். இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

  கொரோனா பரவலின் 2ஆவது அலை, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை, மருத்துவ ஆக்சிஜன் கிடைப்பதில் சிக்கல், கொரோனா நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு என பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  எனினும், இதிலிருந்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மீண்டது. அதனைத் தொடர்ந்து தற்போது படிப்படியாக தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 3ஆவது அலை வந்தாலும் அதை சந்திக்க தயார் என்ற நிலைக்கு தமிழக அரசு தயாரி நிலையில் உள்ளது.

  இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவலில் கவலையளிப்பதாக இருந்த 8 வடகிழக்கு மாநில முதலமைச்சர்களுடன் கடந்த 13ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, மலைவாழிடங்கள், சந்தைகளில் முக கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும் பலர் இருப்பது கவலை அளிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

  இந்த நிலையில் தொற்று பரவலில் சரிவை சந்திக்காத மாநிலங்கள் மற்றும் தொற்று பரவல் அதிகரிக்கும் மாவட்டங்களைக் கொண்ட மாநில முதலமைச்சர்களுடன் இன்று பிரதமர் உரையாற்றுகிறார்.

  இந்நிலையில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணியளவில் 6 மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சியில் ஆலோசனை நடத்துகிறார்.

  Must Read : மேகதாது அணை விவகாரம்... இன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்கிறது தமிழக அனைத்துக் கட்சிக் குழு

  தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநில முதலமைச்சர்களுடன், நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுகிறார். இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்.

  Published by:Suresh V
  First published:

  Tags: CoronaVirus, Covid-19, MK Stalin, Narendra Modi