கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் என்ன செய்யவேண்டும்? மத்திய சுகாதார அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறை

கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்தவர்கள் யோகா, நடைபயிற்சி செய்யலாம் எனவும், சவன்பிராஷ் மருந்து அருந்தலாம் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.  மீண்டவர்களின் நலனுக்காக மத்திய சுகாதார அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் என்ன செய்யவேண்டும்? மத்திய சுகாதார அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறை
கோப்புப் படம்
  • News18 Tamil
  • Last Updated: September 14, 2020, 9:08 AM IST
  • Share this:
கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்தவர்கள் நலனுக்காக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தினம்தோறும் யோகா, மூச்சுப் பயிற்சி, காலை மாலை வேளைகளில் நடை பயிற்சி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் அல்லது பால் உடன் சேர்த்து சவன்பிராஷ் மருந்து அருந்தலாம் என தெரிவித்துள்ளது.

சத்துள்ள சூடான உணவுகளை சாப்பிடுமாறும், எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளை உண்ணுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மது குடிப்பது மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ள மத்திய அரசு, போதுமான தூக்கம் இருக்கும் வகையில் பார்த்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

சர்க்கரை நோயாளிகள், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அடிக்கடி பரிசோதித்து கொள்ள வேண்டும் எனவும், பல்ஸ் ஆக்சிமூட்டர் மூலம் ஆக்சிஜன் அளவையும் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


மேலும் படிக்க...இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 37 லட்சத்தை கடந்தது..



தொடர்ந்து வறட்டு இருமல், தொண்டை கட்டு போன்றவை இருந்தால், மருந்துகள் எடுக்கலாம் என்றும், நீராவி பிடித்து தொண்டையில் நீர் படுமாறு வாய் கொப்பளிக்கலாம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
First published: September 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading