• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • சமூகப் பரவல் ஏற்படாத நிலையை உருவாக்க அரசு பாடுபட்டு வருகிறது - அமைச்சர் விஜய பாஸ்கர்

சமூகப் பரவல் ஏற்படாத நிலையை உருவாக்க அரசு பாடுபட்டு வருகிறது - அமைச்சர் விஜய பாஸ்கர்

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு வீடு வீடாக சென்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

  • Share this:
சென்னை புளியந்தோப்பு பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் 1400 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக அமைக்கப்பட்டுள்ளது.  இந்த மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், “சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாவதால் 10 மையங்களில் பரிசோதனையுடன் கூடிய சிகிச்சை மையங்களை அமைத்துள்ளோம். புளியந்தோப்பு பகுதியில் மட்டும் 1400 படுக்கை வசதிகள் கொண்ட மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அறிகுறிகள் இல்லாமல் குறைந்த பாதிப்புடன் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் இங்கு அனுமதிக்கப்படுவர். வீடுகளில் இருப்பது போலவே அனைத்து வசதிகளும் கொண்டு இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. யாருக்கு சிறப்பு மையத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை மருத்துவர்கள் சோதனைக்கு பின்னரே முடிவெடுப்பார்கள். சமூக பரவல் ஏற்படாத நிலையை உருவாக்கதான் அரசு பாடுபட்டு வருகிறது” என்றார்.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்று பரிசோதனை கட்டணம் அதிகமாக இருப்பதாக எழுப்பிய கேள்விக்கு, தனியார் மருத்துவமனை நிர்வாகிகளிடம் கட்டணத்தை குறைப்பது தொடர்பாக அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என பதிலளித்தார்.

”இதுவரை வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 1393 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பரிசோதனை அதிகரிப்பதால் தான் எண்ணிக்கையும் அதிகமாக வருகிறது. எண்ணிக்கையை கண்டு யாரும் பயப்பட வேண்டாம்” என்று தெரிவித்த அமைச்சர் சென்னையில் கண்காணிப்பு அதிகரிக்கப்படும் வீடு, வீடாக சென்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

Also see...

எனது நாட்கள் எண்ணப்படுகின்றன - கிரண்பேடி திறந்த மடல்






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: