கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு பதட்டமோ, பயமோ, பீதியோ வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு பதட்டமோ, பயமோ, பீதியோ வேண்டாம். அதே நேரத்தில் இது ஒரு தொற்று நோய். காற்றில் இருமல் தும்மலின் மூலம் பரவும் நோய். நாம் கவனமாக இருக்க வேண்டும். அலட்சியப்படுத்தக் கூடாது. காரணம் அண்டை நாட்டில் உள்ளது. தற்போது அண்டை மாநிலத்திலும் ஒருவருக்கு உள்ளது.
நமது சுகாதாரத்துறை இதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது. பொதுமக்கள் தேவை இல்லாத புரளிகளை பரப்ப வேண்டாம். பொது இடங்கள், வீடு, கோவில், பேருந்து நிலையம், ஷாப்பிங் என வெளியில் சென்று வந்தால் சோப்பு போட்டு கைகளைக் கழுவ வேண்டும்.
20 சதவிகிதம் நோய் இருமல் தும்மல் மூலமா பரவுகிறது. 80 சதவிகிதம் இருமல், தும்மல் நேரடி தொடர்பு மூலம் பரவுகிறது. சீனாவில் இருந்து வருபவர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் உள்ளது என்ற பார்வை வேண்டாம். மருத்துவர்கள் அனைவரையும் கண்காணிக்கின்றனர் பதட்டம் பீதி வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.