கொரோனா தடுப்பு பணி இதனால் சவாலாக உள்ளது...! அமைச்சர் விஜய பாஸ்கர் விளக்கம்

”தமிழகத்தில் பாதிப்புகளை குறைத்தாலும், வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு தொற்று உள்ளதால் பாதிப்பு உயர்ந்து வருகிறது”

கொரோனா தடுப்பு பணி இதனால் சவாலாக உள்ளது...! அமைச்சர் விஜய பாஸ்கர் விளக்கம்
விஜய பாஸ்கர்
  • News18
  • Last Updated: May 22, 2020, 11:24 AM IST
  • Share this:
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களில் நெகடிவ் ஆக இருக்கும் கொரோனா பரிசோதனை முடிவுகள், பின்னர் பாசிட்டிவ் ஆக மாறுவதால் தடுப்பு பணிகள் சவாலாக உள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மகாராஷ்ட்ராவில் இருந்து வந்த 76 பேர், கேரளா, டெல்லி, மேற்குவங்கம், மாலத்தீவில் இருந்த வந்த தலா ஒருவர் உள்பட தமிழகத்தில் மேலும் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13ஆயிரத்து 967-ஆக அதிகரித்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் மேலும் 567 பேர் உள்பட இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 795-ஆக உள்ளது.


தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் ஒரே நாளில் 400 பேர் உள்பட இதுவரை 6 ஆயிரத்து 282 பேர் குணமடைந்திருப்பதாக தெரிவித்தார். மேலும் 7 பேர் உயிரிழந்ததாக அமைச்சர் கூறினார். இதனால், இதுவரை ஏற்பட்ட உயிரிழப்பு 94-ஆக அதிகரித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களில் நெகடிவ்-ஆக இருந்து பாசிடிவ் ஆக மாறியவர்களின் எண்ணிக்கை 25-ஆக உள்ளதாக கூறிய விஜயபாஸ்கர், அவர்களை வீட்டுக்கு அனுப்பும்போது பாசிடிவ் முடிவு வருவதால், கொரோனா தடுப்பு பணிகள் சவாலாக உள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் பாதிப்புகளை குறைத்தாலும், வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு தொற்று உள்ளதால் பாதிப்பு உயர்ந்துவருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading