கொரோனா குறித்து மக்கள் அலட்சியமாக உள்ளனர் - அமைச்சர் விஜயபாஸ்கர் கவலை

”கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் இதுவரை சமூக பரவல் நிலையை எட்டவில்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர், தேவையற்ற பயணங்களை மக்கள் தவிர்க்கும்படியும் கேட்டுக்கொண்டார்”

கொரோனா குறித்து மக்கள் அலட்சியமாக உள்ளனர் - அமைச்சர் விஜயபாஸ்கர் கவலை
அமைச்சர் விஜயபாஸ்கர்
  • Share this:
கொரோனா குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை எனவும், மக்கள் அலட்சியமாக இருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கவலை தெரிவித்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நாளை நடைபெறும் மக்கள் ஊரடங்கிற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். அரசு தரும் அறிவுரைகளை மக்கள் முழுமையாக கடைபிடித்து நடக்க வேண்டும் என்றார்.

கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் இதுவரை சமூக பரவல் நிலையை எட்டவில்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர், தேவையற்ற பயணங்களை மக்கள் தவிர்க்கும்படியும் கேட்டுக்கொண்டார்.


நாட்டு மக்கள் அனைவரின் நலனுக்காக நாளை ஒருநாள் மக்கள் ஊரடங்கு நடைபெறுவதாகவும், அனைவரின் ஆரோக்யத்திற்கான மக்கள் ஊரடங்கை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறினார். வளர்ந்த நாடுகளே கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருவதாகக் கூறிய அமைச்சர், கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஓய்வுபெற்ற மருத்துவர்களுக்கு சேவை செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Also see...
 
First published: March 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading