கொரோனா அறிகுறிகள் பரிசோதனை 95% நிறைவு... தீவிர கண்காணிப்பில் 66 ஆயிரம் பேர்...! அமைச்சர் வேலுமணி!

”தமிழகம் முழுவதும், பொதுமக்கள் கூடுவதை தடுக்க7,497 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி விநியோகம் செய்யப்படுகிறது”

கொரோனா அறிகுறிகள் பரிசோதனை 95% நிறைவு... தீவிர கண்காணிப்பில் 66 ஆயிரம் பேர்...! அமைச்சர் வேலுமணி!
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  • Share this:
தமிழகத்தில் வீடு வீடாக கொரோனா தொற்று அறிகுறிகள் பரிசோதனை செய்யும் பணிகள் 95 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ளதாகவும், 66 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளதாகவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து ரிப்பன் மாளிகையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாக முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங், நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன், சென்னை நோய் தடுப்பு சிறப்பு கண்காணிப்புக் குழு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள ராஜேந்திர குமார், அபாஷ் குமார்,  சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், காவல் ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வேலுமணி,தமிழகம் முழுவதும் வீடு வீடாக கொரோனா அறிகுறிகள் சோதனை செய்யும் பணிகள் 95% நிறைவு பெற்றுள்ளதாகவும், 66,347 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், சென்னையில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு முறையான சிகிச்சை அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு சென்னை மாநகராட்சி கண்காணித்து வருவதாகவும், தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் காவலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மருத்துவ உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும், பொதுமக்கள் கூடுவதை தடுக்க7,497 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும், 582 இடங்களில் பொது உணவுக் கூடம் அமைக்கப்பட்டு தினமும் 8.33 லட்சம் பேருக்கும், 658 அம்மா உணவகங்கள் மூலம் 6.25 லட்சம் மக்களுக்கு தினமும் உணவு விநியோகம் செய்யபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.இது தவிர,ஈரோடு மாநகராட்சியில் மற்றும் இந்திய மருத்துவமனை இணைந்து நடமாடும் மருத்துவமனை இயக்கப்பட்டு வருகிறது என்றார். தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களிலும் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்க அமைச்சர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

Also see...
First published: April 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading