கொரோனாவை தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜு அணிந்துள்ள அட்டை - என்னென்ன வேலை செய்யும் தெரியுமா...?

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட அமைச்சர் செல்லூர் ராஜு தற்போது ஜப்பானிய தொழில்நுட்ப கொரோனா தடுப்பு அட்டையை பயன்படுத்துகிறார்

கொரோனாவை தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜு அணிந்துள்ள அட்டை - என்னென்ன வேலை செய்யும் தெரியுமா...?
கொரோனா தடுப்பு அட்டை
  • News18
  • Last Updated: August 3, 2020, 11:22 AM IST
  • Share this:
அண்மையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, போகிற போக்கில் கொரோனா தன்னையும் பாதித்துவிட்டதாக கூறியிருந்தார். எனினும், தற்போது முன்பைவிட, தன்னுடைய பாதுகாப்பில் அதிக கவனத்தை அவர் செலுத்துகிறார்.

அந்த வகையில் தற்போது, அவர் கழுத்தில் அடையாள அட்டை போன்ற கொரோனா தடுப்பு அட்டையை அணிந்து வருகிறார்.

அந்தவகையில் அண்மையில் தன்னை தொட்டுவிட்டுச்சென்ற கொரோனாவை, மீண்டும் தன்னிடம் நெருங்கி விடாமல் இருக்க தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, எச்சரிக்கையுடன் அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றார் அமைச்சர் செல்லூர் ராஜூ. 'வைரஸ் ப்ளாக் அவுட்' என்ற பெயரில் ஜப்பான் நிறுவனம் இந்த அட்டையை வெளியிட்டுள்ளது.


1 மீட்டர் சுற்றளவில் காற்றில் வைரஸ் பரவுதலை இந்த அட்டை கட்டுப்படுத்தும் என்று கூறப்படுகிறது. அட்டைக்குள் குளோரின் டை ஆக்ஸைடு நிரப்பப்பட்டுள்ளது. முகக்கவசம், கிருமிநாசினி ஆகியவற்றுடன் இந்த அட்டை ஒரு கூடுதல் பாதுகாப்பு அம்சமாக இருக்கும்.

எனினும், கொரோனா வைரஸை இந்த அட்டை கொல்வதாக நிரூபிக்கப்பட்ட ஆய்வு எதுவும் இல்லை. அமேசான் உள்ளிட்ட இணையதளங்களில் இந்த அட்டை விற்பனைக்கு கிடைக்கின்றன. ₹ 150 முதல் இதன் விலை இருக்கிறது.
First published: August 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading