முகப்பு /செய்தி /கொரோனா / மே 3 வரை ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வேண்டுகோள்!

மே 3 வரை ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வேண்டுகோள்!

அமைச்சர் ஆர்.பி உதயகுமார் (கோப்புப்படம்)

அமைச்சர் ஆர்.பி உதயகுமார் (கோப்புப்படம்)

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஏற்படும் சரிவை மீட்டுவிட முடியும், ஆனால் மக்களின் உயிர்தான் தற்போது முக்கியம் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகத்தில் ஐடி நிறுவனங்கள் மே 3-ம் தேதி வரை திறக்கப்படாது என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

கொரோனா அச்சம் காரணமாக அனைவரும் வீட்டில் இருந்தே வேலை செய்யும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் ஐடி நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், தகவல் தொழில்நுட்பவியல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோருடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஊரடங்கின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், ஐடி நிறுவன ஊழியர்கள் முன்புபோல் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஏற்படும் சரிவை மீட்டுவிட முடியும், ஆனால் மக்களின் உயிர்தான் தற்போது முக்கியம் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

Also see...


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

First published:

Tags: CoronaVirus, IT Industry, Minister udhayakumar