வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் நுரையீரல் 90 சதவீதம் பாதிப்பு

வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் நுரையீரல் 90 சதவீதம் பாதிப்பு

வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு

எக்மோ மற்றும் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சையில் இருக்கும் அவரை மருத்துவ நிபுணர் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

 • Share this:
  வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் நுரையீரல் 90 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

  மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 13-ஆம் தேதி அமைச்சர் துரைக்கண்ணு ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

  அதில் துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு எடுக்கபப்பட்ட சிடி ஸ்கேனில் 90 விழுக்காடு நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

  இதனால் எக்மோ மற்றும் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சையில் இருக்கும் அவரை மருத்துவ நிபுணர் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. முன்னதாக முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு சென்று துரைக்கண்ணுவிற்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தனர்.
  Published by:Vijay R
  First published: