ரஜினி பாராட்டு... சி.பி ராதாகிருஷ்ணன் விமர்சனம்..! அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம்

கந்தசஷ்டி விவகாரத்தில் அதிமுக அரசை பாராட்டிய ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி எனக்கூறிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.

ரஜினி பாராட்டு... சி.பி ராதாகிருஷ்ணன் விமர்சனம்..! அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம்
அமைச்சர் மாபா பாண்டியராஜன்
  • Share this:
வியாசர்பாடியில் அமைந்துள்ள சித்தா சிகிச்சை மையத்தில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்புவர்களை வழி அனுப்பிவைக்கும் விழாவில்  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பங்கேற்றார்.

பின்னர் நியூஸ்18 தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்த அவர் கூறுகையில் ” கந்தசஷ்டி விவகாரத்தில் அதிமுக அரசை பாராட்டிய ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி. ரஜினிகாந்த் மிகத் தெளிவாக பேசி இருக்கிறார். நாங்கள் எடுத்த நடவடிக்கைகளை கவனமாக கவனித்திருக்கிறார்.

பாஜகவில் ஒரு சிலர் மட்டும் அதிமுகவிற்கு இது விளைவுகளை ஏற்படுத்தும் என கூறியுள்ளனர். குறிப்பாக சிபி ராதாகிருஷ்ணன் அவர்களிடம் நான் நேரடியாகவே தொடர்புகொண்டு பேசினேன். அப்பொழுது அவர் கோவையில் பேசியது குறித்து என்னிடம் விளக்கம் தெரிவித்தார். கருப்பர் கூட்டம் மீது வேகமாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் எனக் கூறினார். அதுவும் அதிமுக தோற்று விடக் கூடாது என்ற அடிப்படையில்தான் அந்த கருத்தை ஆதங்கத்தில் தெரிவித்தேன் என கூறினார்.


ஆனால், திமுகவை பொருத்தவரை அதன் இயல்பே ’ஆன்ட்டி ஹிந்து’ என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அது முத்திரை கிடையாது அவர்களின் இயல்பே அதுதான் எனவே தான் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துக்கள் என்று அவருடைய சமூக பக்கத்தில் வந்து அதற்கு மறுப்பு தெரிவித்து, ஸ்டாலின் அறிக்கை விட்டார்.

ஆனால் தற்போது தேர்தல் வருவதால் வடிவேல் சொல்வதைப்போல நானும் ரவுடிதான் என்பதைப் போல, நானும் இந்துதான் என்று சொல்லிக் கொண்டு வருகிறார். நல்ல விஷயங்களை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியிருக்கிறார். பலரும் எதிர்ப்புத் தெரிவித்த தூத்துக்குடி சம்பவத்திலும் தமிழக அரசு நடவடிக்கைகளை கவனித்து பாராட்டினார்.

மேலும் படிக்க...3 மகன்கள் இருந்தும் அனாதை என கடிதம் எழுதிவைத்து முதிய தம்பதி தற்கொலை - சோக பின்னணி

அதே வேளையில் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். குறிப்பாக டாஸ்மாக் விவகாரத்தில் மீண்டும் கடை திறந்தால் வெற்றிபெற முடியாது என்பது போன்ற கடுமையான கருத்துக்களையும் தெரிவித்துள்ளார்.

எனவே அவர் அரசியலில் இல்லாத நபர் ஒரு பொது மனிதர். அவர் நல்ல விஷயங்கள் சொல்லும்போது நாங்கள் அதை வரவேற்போம்” என்று கூறினார்.
First published: July 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading