கமல்ஹாசனை மக்கள் எடை போடுவதற்கு அவரின் கருத்துக்களே போதும் - அமைச்சர் கடம்பூர் ராஜு

”திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அரசு விதித்த நிபந்தனைகளுடன் நடைபெற்று வருகிறன”

கமல்ஹாசனை மக்கள் எடை போடுவதற்கு அவரின் கருத்துக்களே போதும் - அமைச்சர் கடம்பூர் ராஜு
அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ
  • Share this:
நடிகர் கமல்ஹாசனை பற்றி மக்கள் எடை போடுவதற்கு அவருடைய கருத்துக்களே போதும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு  கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக  வளாகத்தில் உள்ள விவசாயிகளுக்கு கூட்டுப்பண்ணை திட்டம் மூலமாக பண்ணை இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு 3 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.16.84 லட்சம் மதிப்பிலான 9 பண்ணை இயந்திரங்களை வழங்கினார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழிற்சார்ந்த அறிவிப்புகளைதான் அறிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கான அறிவிப்புக்களை பிரதமர் தான் அறிவிப்பார். தொழிற்சாலைகள் நஷ்டம் அடையக்கூடாது, நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைய கூடாது என்பதற்காக அதனை சார்ந்த அறிவிப்புகளை தான் மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ளார்.


அனைத்து தரப்பினருக்குமான பொதுவான கருத்தினை, பிரதமர் அறிவிக்கும் போது தான் எதிர்பார்க்க முடியும். இதனை மத்திய அரசு உரிய நேரத்தில் அறிவிக்கும். நடிகர் கமலஹாசன் எந்த துறையினை ஆய்வு செய்தார் என்பதனை அவரிடம் தான் கேட்க வேண்டும். எங்கள் துறை எப்படி முன்னோக்கி சொல்கிறது என்பது எங்களுக்கு தெரியும். முன்னோக்கி செல்கின்ற காரணத்தினால்தான் அவருடைய இந்தியன் 2 திரைப்படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு திரைப்பட துறையினர் அனுமதி கேட்டதும் முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று ஒரே நாளில் அனுமதி வழங்கப்பட்டது. முன்னேற்றமா, பின்னேற்றமா என்று கமல்ஹாசன்தான் சொல்ல வேண்டும். அவருடைய இந்தியன் 2 படத்தின் பணிதான் முதலில் நடைபெற்று வருகிறன. இதே போன்று தான் ஒவ்வொரு துறையிலும் பணிகள் நடைபெற்று வருகிறன.

நடிகர் கமல்ஹாசனை பற்றி மக்கள் எடை போடுவதற்கு அவருடைய கருத்துக்களே போதும் என்றும், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அரசு விதித்த நிபந்தனைகளுடன் நடைபெற்று வருகிறன. விதி மீறகளை மீறாமல் அரசு பார்த்து கொள்ளும் என்றார்.Also see...Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
First published: May 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading