• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகளை பொதுமக்களுக்கு வழங்கிய அமைச்சர் ஜெயக்குமார்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகளை பொதுமக்களுக்கு வழங்கிய அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயகுமார்

அமைச்சர் ஜெயகுமார்

”ஊரடங்கு முடிந்த பின்பு மீனவர்கள் கடலுக்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது”

  • Share this:
சென்னை ராயபுரத்தில் உள்ள ராபின்சன் மைதானத்தில் கொரோனாவிற்கு எதிராக எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஹோமியோபதி விட்டமின் மாத்திரைகளை பொதுமக்களுக்கு அமைச்சர் ஜெயகுமார் வழங்கினார்.

அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது, ” உலகம் முழுவதும் உள்ள மருத்துவ குழுவினர் கொரோனா தடுப்பிற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. கொரோனாவிற்கு நிரந்தர தீர்வாக மருந்து கண்டுபிடிக்க வேண்டும்.

சித்தா மற்றும் ஹோமியோபதி முறையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல்வேறு மருந்துகள் கண்டுபிடிக்கபட்டுள்ளன. தற்போது ஹோமியோபதி முறையில் ஆர்சனிக் ஆல்பம் 30 என்ற மாத்திரை கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உருவாக்குகிறது.

இதனை பயன்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது பொதுமக்களுக்கு இந்த ஆர்சனிக் ஆல்பம் 30 மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது.

சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் அதிகளவில் கொரோனா தொற்று இருப்பதால் இங்கு முதன் முதலாக இந்த பணியை தொடர்கிறோம்.  திமுக பட்டியலினத்தவருக்கு அதிக முக்கியம் தரவில்லை. அதனால் இன்னும் நிறைய பேர் அக்கட்சியில் இருந்து வெளியேறுவார்கள்.

தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவு சின்னமாக மாற்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மீனவ நலவாரியம் சார்பில் 4,90,000 பேருக்கு ஏற்கனவே ரூ 1000, கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாம் கட்ட பணியாக மேலும் ரூ.1000 வழங்கப்பட்டு வந்துள்ளது. மீனவர் குடும்பம் என கணக்கெடுக்காமல் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கணக்கெடுக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

மீனவர்கள் வாழ்வாதாரம் காக்கப்படும். ஊரடங்கு முடிந்த பின்பு மீனவர்கள் கடலுக்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது”
என அவர் தெரிவித்தார்.

ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் ஞானசம்பந்தம் கூறியதாவது, கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தால், சில ஓமியோபதி மாத்திரைகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனாவை தடுக்க ஆங்கில மருத்துவத்தில் ஹைட்ராக்சின் குளோரோகுயின், சித்த மருத்துவத்தில் கபசுர குடிநீர் போன்ற பல்வேறு மருத்துவ முறைகளில் தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கொரோனா குறித்து ஏற்படும் அறிவுரைகளை தொடர்ந்து மாத்திரையின் அளவு அதிகரித்து வழங்கப்படும். இதை தினசரி 4 மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுத்து கொள்ள வேண்டும்.

அனைத்து மண்டலங்களிலும் விரைவாக நோய் எதிர்ப்பு மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட்டும். தற்போது ஒரு மாதத்திற்கு தேவையான மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
என அவர் தெரிவித்தார்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: