18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி செலுத்தப்படும் - ஹர்ஷவர்தன்

ஹர்ஷ் வர்தன்

இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உறுதியளித்துள்ளார்.

 • Share this:
  வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த சுகாதார அமைச்சர்கள், முதன்மை செயலாளர்கள் உள்ளிட்டோருடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நேற்று கலந்துரையாடல் நடத்தினார்.

  அப்போது, “இந்தியா 51 கோடி தடுப்பூசி டோஸ்களை ஜூலை மாத இறுதிக்குள் கொள்முதல் செய்யும். ஆகஸ்ட்டு முதல் டிசம்பர் மாத இறுதிக்குள் 216 கோடி தடுப்பூசி டோஸ்கள் வாங்கப்படும். இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் டோஸ்கள் மூலம் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் குறைந்தபட்சம் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும்” என்று உறுதியளித்தார்.

  நாட்டின் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை நாளொன்றுக்கு 25 லட்சம் என்ற அளவிற்கு அதிகரித்து இருப்பதாக தெரிவித்த ஹர்ஷவர்தன் நேற்று முன்தினம் முதல் முறையாக 20 லட்சம் பேருக்கு ஒரே நாளில் பரிசோதனை நடத்தி இருப்பதாக தெரிவித்தார். மேலும், கொரோனா தடுப்பூசி திட்டத்தின் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டி அவர் விளக்கம் அளித்தார்.

  Must Read : இந்தியாவில் உருமாற்றம் பெற்ற கொரோனாவிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் ஃபைசர், மாடர்னா தடுப்பூசிகள்

   

  இந்நிலையில், தமிழகத்தில் இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி பேடும் பணிகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: