• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • அமைச்சர் பெஞ்சமினின் மகனுக்கு வீட்டிலேயே எளிய முறையில் நடந்த திருமணம்!

அமைச்சர் பெஞ்சமினின் மகனுக்கு வீட்டிலேயே எளிய முறையில் நடந்த திருமணம்!

அமைச்சர் பெஞ்சமினின் மகனுக்கு வீட்டில் நடந்த திருமணம்

அமைச்சர் பெஞ்சமினின் மகனுக்கு வீட்டில் நடந்த திருமணம்

தனிமனித இடைவெளியுடன் நடந்த திருமண விழாவில், திருவேற்காடு நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி, சேலையுடன் இனிப்பு வழங்கப்பட்டது.

  • Share this:
    தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமினின் மகன் திருமணம் வீட்டிலேயே எளிய முறையில் நடைபெற்றது.

    அமைச்சர் பெஞ்சமினின் இளைய மகன் சாம்சன் பாலுக்கும், ஸ்ரீசாத்திகா என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக சென்னை அயனம்பாக்கத்தில் உள்ள அமைச்சரின் வீட்டிலேயே நடைபெற்ற திருமணத்தில், மொத்தம் 26 பேர் கலந்து கொண்டனர்.

    முகக்கவசம், தனிமனித இடைவெளியுடன் நடந்த திருமண விழாவில், திருவேற்காடு நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி, சேலையுடன் இனிப்பு வழங்கப்பட்டது.

    அமைச்சர் பெஞ்சமினின் மகனுக்கு வீட்டில் எளிய முறையில் நடந்த திருமணம்


    இந்த திருமணத்திற்கு ஏற்கனவே மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கொரானோ வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் திருமணம் எளிய முறையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    Also see...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: