”கொரோனா கார்ட்டூன் இல்லையே” - புலம்பெயர் தொழிலாளர்களை சிரிக்க வைத்த முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பணியாற்றி வந்த வட மாநில தொழிலாளர்கள் ரயிலில் ஏறும் முன்பு அம்மாநில முதல்வர் நாராயணசாமியுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

”கொரோனா கார்ட்டூன் இல்லையே” - புலம்பெயர் தொழிலாளர்களை சிரிக்க வைத்த முதலமைச்சர் நாராயணசாமி
முதல்வருடன் செல்பி எடுத்து கொண்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்
  • Share this:
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பணியாற்றி வந்த வட மாநில தொழிலாளர்கள் கொரோனாவால் தொழில் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் புதுச்சேரியில்  முடங்கிவிட்டனர். இவர்கள் சொந்த ஊர் திரும்ப விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் புதுச்சேரி அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் ஜம்மூ காஷ்மீர், பீகார், உபி மாநிலங்களுக்கு ஏற்கனவே சிறப்பு ரயில் மூலம் தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அடுத்தகட்ட அசாம், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் 1020 பேர் நேற்று இரவு புதுச்சேரியில் இருந்து சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

காரைக்காலில் இருந்து நேற்று புறப்பட்டு இந்த சிறப்பு ரயில் அங்கிருந்த 300 தொழிலாளர்கள் ஏற்றிக்கொண்டு புதுச்சேரி ரயில் நிலையத்தில் நேற்று மாலை அடைந்தது. இங்கு காத்திருந்த 900 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு இரவு 9 மணிக்கு ஜார்கண்ட், அசாம் மாநிலங்கள் வழியாக மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பான் குரி ரயில் நிலையத்தை சென்றடைகிறது.


ரயிலில் புறப்பட்ட  புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர். அப்போது ஒருவர் தொழிலாளர் பெயர் என்ன என இந்தியில் கேட்க அவர் "பர்ரானா கார்ட்டூன்"என கூற முதல்வர் "கொரோனா கார்ட்டூன் இல்லையே" என கூற சிரித்தார்.

அப்போது பல தொழிலாளர்கள் ஆர்வத்துடன்  முதல் அமைச்சர் நாராயணசாமியுடன் செல்ஃபி எடுத்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீரை வழங்கி கொடியசைத்து சிறப்பு ரயிலை முதல்வர்  அனுப்பி வைத்தார். சிறப்பு ரயில் அனுப்பும் நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி, சட்டமன்ற உறுப்பினர் ஜெயமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அருண் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க...தமிழகத்தில் முதலீடு செய்ய 11 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் கடிதம்
First published: June 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading