ஹோம் /நியூஸ் /கொரோனா /

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ரயிலில் கூடுதல் பயணிகள்...!

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ரயிலில் கூடுதல் பயணிகள்...!

கோப்புப்படம்

கோப்புப்படம்

"புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான ரயில்களை இயக்க மாநிலங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்"

  • News18
  • 1 minute read
  • Last Updated :

    புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் கூடுதலாக 500 பயணிகளை ஏற்றிச் செல்ல ரயில்வே முடிவு செய்துள்ளது.

    தற்போது ஒவ்வொரு ரயிலிலும் தலா 1,200 தொழிலாளர்கள் பயணிக்கும் நிலையில், இனி 1,700 பேரை அனுமதிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு படுக்கைக்கு ஒருவர் என்ற ரீதியில் பயணிகளின் எண்ணிக்கை இருக்கும். சிறப்பு ரயில்கள் 3 நிலையங்களில் நின்று செல்லும் என்றும் ரயில்வே கூறியுள்ளது.

    சாலைகளிலோ, தண்டவாளங்களிலோ தொழிலாளர்கள் நடந்த செல்வதை மாநிலங்கள் அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ள மத்திய உள்துறை அமைச்சகம், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான ரயில்களை இயக்க மாநிலங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.


    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Published by:Sankar
    First published:

    Tags: CoronaVirus, Indian Railways, Lockdown, Migrant workers