ஹோம் /நியூஸ் /கொரோனா /

ஒரு வயது குழந்தை இறப்பு... முகம் கூட பார்க்க முடியாத நிலை...! கல் நெஞ்சையும் கரைத்த தொழிலாளியின் புகைப்படம்

ஒரு வயது குழந்தை இறப்பு... முகம் கூட பார்க்க முடியாத நிலை...! கல் நெஞ்சையும் கரைத்த தொழிலாளியின் புகைப்படம்

ராம்புகார் பண்டிட் (படம்: Atul Yadav / PTI)

ராம்புகார் பண்டிட் (படம்: Atul Yadav / PTI)

குழந்தையின் முகத்தை கடைசி முறையாகப் பார்க்க வேண்டும் என எண்ணி கதறிய புகைப்படம் பலரையும் கலங்க வைத்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர் ஒருவர், தனது ஒரு வயது குழந்தையின் இறப்பு செய்தி அறிந்து, சாலையிலேயே கதறி அழுத புகைப்படம் கல் நெஞ்சையும் கரைக்கும் வகையில் அமைந்தது.

பிகாரைச் சேர்ந்த ராம்புகார் பண்டிட் என்ற தொழிலாளர், ஊரடங்கு உத்தரவால் டெல்லியில் சிக்கிக்கொண்டார். இந்த நிலையில், தனது ஒரு வயது மகன் இறந்துவிட்டதாக தனது மனைவி கூறியதைக் கேட்ட ராம் பண்டிட், உடனடியாக பிகாரை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

அப்போது குழந்தையின் முகத்தை கடைசி முறையாகப் பார்க்க வேண்டும் என எண்ணி, சாலையிலேயே அமர்ந்து அவர் கதறிய புகைப்படம், பலரையும் கலங்க வைத்துள்ளது. பிடிஐ புகைப்படக் கலைஞர் அதுல் யாதவ் எடுத்த இந்த புகைப்படம், ஊரடங்கு ஏற்படுத்திய துயரத்தின் சுவடாக அமைந்தது.

காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர்களின் உதவியால், இறுதியாக ராம் பண்டிட் பிகார் சென்றார்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Also see:

First published:

Tags: Bihar, Lockdown