எஸ்.பி.பி மரணத்துக்கு காரணம் என்ன? - மருத்துவமனை விளக்கம்

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுரமணியம் மரணத்துக்கான காரணம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

எஸ்.பி.பி மரணத்துக்கு காரணம் என்ன? - மருத்துவமனை விளக்கம்
எஸ்.பி பாலசுப்ரமணியம்
  • News18 Tamil
  • Last Updated: September 28, 2020, 8:44 PM IST
  • Share this:
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் தொடர்பாக MGM மருத்துவமனை நிர்வாகம் செய்தியாளர்களைச் சந்தித்தது. அதில் எஸ்.பி.பியின் மகன் SPB சரண் கலந்துகொண்டார். எஸ்.பி.பிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த சரண், துக்கத்தில் இருந்து மீள்வதற்குள் ஏராளமான புரளிகள் வருவது வருத்தமாக உள்ளது என்றார்.

எஸ்.பி.பி சிகிச்சைக்குப் பணம் இல்லாமல் சிரமப்பட்டதாக ஆதாரமற்ற தகவல் பரப்படுகின்றது என்று கூறிய அவர், சிகிச்சைக்கான பணம் வேண்டாம் என்றது மருத்துவமனை. இன்சுரன்ஸ் தொகையை மட்டுமே மருத்துவமனை பெற்றது. எஸ்.பி.பி நினைவிடத்திற்கு வருவோருக்கு ஏற்பாடுகளைச் செய்துத் தர பஞ்சாயத்து நிர்வாகத்தைக் கேட்டுள்ளோம். சுகாதார செயலரிடம் பேசியிருந்தேன். உதவி தொடர்பாக அமைச்சரிடம் பேசிவிட்டுச் சொல்வதாகக் கூறினார் என்றார்.

Also read: எஸ்.பி.பிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் - ஆந்திர முதல்வர் பிரதமருக்கு கடிதம்


மேலும் கூறுகையில், பணத்துக்கு மட்டுமின்றி மருத்துவ உதவி போன்ற தேவைகளுக்காக அரசைத் தொடர்பு கொண்டோம். எஸ்.பி.பி உடல் சிகிச்சையில் பணம் ஒரு பிரச்னையாக இல்லை. என்று குறிப்பிட்ட சரண், அஜித் வந்தால் என்ன, வரவில்லை என்றால் என்ன? அவர் எங்கிருந்தாலும் மரியாதை செலுத்தினால் போதும். அதுவொரு விஷயமில்லை. தற்போது என் அப்பாவே இல்லை என்றார் வேதனையுடன்.

எக்மோ, தொடர் செயற்கை சுவாசத்தால் கடுமையாக தொற்று ஏற்பட்டது. மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டது. இதுதான் எஸ்.பி.பி மரணத்திற்குக் காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
First published: September 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading