கொரோனாவுடன் 100 நாள் போராடி மீண்ட மீரட் பெண்..!

மீரட் பெண்

மருத்துவர்களின் தொடர் சிகிச்சையின் காரணமாக தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

 • Share this:
  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் 100நாள் போராடி சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

  கொரோனா இரண்டாவது அலை ஏப்ரல் மாதம் இந்தியாவில் தலைத்தூக்கியது. படுக்கை வசதிகள் இல்லாதது, ஆக்சிஜன் பற்றாக்குறை என சில வாரங்களில் மரணங்கள் அதிகரித்தது. மீரட்டை சேர்ந்த 45 வயதான அர்ச்சனா தேவி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவப் பரிசோதனைகள் மூலம் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து மீரட்டில் உள்ள லாலா லஜபதி ராய் நினைவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தாண்டு ஏப்ரல் மாதம் 21-ம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

  சுவாச கருவிகளுடன் உதவியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்களின் தொடர் சிகிச்சையின் காரணமாக தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதுகுறித்து பேசிய மருத்துவர்கள், “அந்தப்பெண் ஏப்ரல் 21-ம் தேதி கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாள்களிலே அவருக்கு நெகடிவ் என வந்தது. ஆனால் அவரால் சுவாசிக்க முடியவில்லை. நீண்ட நாள்கள் செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனவே அவர் முழுமையாக குணமடைய 100 நாள்கள் ஆனது. ஜூலை 30-ம் தேதி அவரை டிஸ்சார்ஜ் செய்தோம்” என்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: