கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீனா மட்டுமின்றி உலக நாடுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. கடைசியாக கிடைத்த தகவலின்படி 2,007 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், 75, 138 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 13, 332 பேர் கவலைக்கிடமான நிலையில் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை. சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைககளுக்கு மருத்துவம் அளிக்க சீன மருத்துவர்கள் தங்கள் உடைகளில் கார்ட்டூன் வரைந்த படி சிகிச்சை அளிக்கின்றனர்.
இந்த வீடியோவை சீன ஊடங்கங்கள் வெளியிட்டுள்ளன. மருத்துவர்கள் தாங்கள் அணிந்துள்ள வெள்ளை உடைகளில் மார்க்கர் வைத்து கார்ட்டூன் பொம்மைகளை வரைந்து கொண்டு பணிக்கு செல்லும் இந்த வீடியோ காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Baby don't cry! Medical workers draw cartoon figures on protective suits to comfort kids infected with #COVID19. pic.twitter.com/yaR4WIuowo
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.