கொரோனாவுக்கான மருந்து கலவையை கண்டறிந்துள்ளதாக வங்கதேச மருத்துவர்கள் அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றம்

"60 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் அனைவருமே வெற்றிகரமாக கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

 • Share this:
  கொரோனாவில் இருந்து 4 நாட்களில் குணப்படுத்தும் இரட்டை மருந்து கலவையை கண்டறிந்துள்ளதாக வங்கதேச மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

  வங்கதேச மருத்துவக்கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த தரெக் ஆலம் என்ற மருத்துவரின் குழு கொரோனா குறித்து ஆய்வு செய்து வந்தனர். இவர்மெக்டின் என்ற மருந்தையும், doxy-cycline என்ற மருந்தையும் கலந்து அளித்து சோதித்துள்ளனர்.

  60 பேரிடம் இந்த சோதனை நடந்துள்ளது. 60 பேரும் வெற்றிகரமாக கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். முதல் 3 நாட்களில் சுவாச பிரச்னை சீரடைந்தும், 4ம் நாளில் கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்றும் முடிவுகள் கிடைத்துள்ளன. மேலும் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தற்போது இந்த குழுவினர், சர்வதேச அங்கீகாரத்துக்காக விண்ணப்பித்துள்ளனர்.
  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Sankar
  First published: