மருத்துவ முகக்கவசம் அல்லது துணி முகக்கவசம் - யார்.. யாருக்கு.. எது சிறந்தது..?

முகக்கவசம் என்பது இடத்திற்கேற்ப மற்றும் தேவைக்கேற்ப மாறுபடுகிறது

மருத்துவ முகக்கவசம் அல்லது துணி முகக்கவசம் - யார்.. யாருக்கு.. எது சிறந்தது..?
மெடிக்கல் முகக்கவசம் அல்லது துணி முகக்கவசம்
  • Share this:
கொரோனா வைரஸ் தொற்றானது முகக்கவசம் அணிவதையும் அத்தியாவசியத் தேவையாக மாற்றிவிட்டது. தற்போது மெடிக்கல் கடையில் வாங்கி அணிவதைக் காட்டிலும் பலரும் வீட்டில் தயாரிக்கப்பட்ட, கடைகளில் விற்கக் கூடிய துணியாலான முகக்கவசங்களைப் பயன்படுத்துகின்றனர். இது துவைத்து மீண்டும் பயன்படுத்திக்கொள்ளவும் வசதியாக உள்ளது. ஆனால் இவை இரண்டில் எதற்கு வைரஸை தடுக்கும் ஆற்றல் அதிகம்..? 

மெடிக்கல் முகக்கவசம் :

இது ஒருமுறைப் பயன்படுத்திய பின் தூக்கி எறியக்கூடியது. அதனாலேயே பலரும் இதை தவிர்க்கின்றனர். ஆனால் ஒரு சிலர் இதை கட்டாயம் அணிய வேண்டும்.


மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் அல்லது மருத்துவமனையில் பணியாற்றுவோர் மூன்றடுக்கு மெடிக்கல் முகக்கவசம் அணிந்துகொள்ளலாம்.அதேபோல் கொரோனா பாதிப்பு கொண்டவர், மருத்துவ சிகிச்சைகள் கொண்டிருப்பவர்கள் , கொரோனா அறிகுறி கொண்டவர்கள் இந்த முகக்கவசம் அணிய வேண்டும்.உங்கள் முகக்கவசத்தை எப்படி சுத்தம் செய்து பாதுகாப்பாக வைத்திருக்கிறீர்கள்?

கொரோனா வேகமாகப் பரவும் பகுதிகளில் வசிப்பவர்கள்,  அதேபோல் 60 வயதைக் கடந்தவர்கள், உடல் நோயால் பாதிப்பட்டிருப்பவர்கள் அணியலாம்.

துணி முகக்கவசம் :

இது நம் வசதிக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ளலாம். துவைத்து சுத்தமாக பராமரிப்பதே இதன் முக்கிய விஷயம்.

இந்த முகக்கவசம் கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் அணியலாம், அதிக கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் வசிப்போர் அணியலாம்.சமூக இடைவெளி இருக்கக் கூடிய இடங்களில் அல்லது பயணம் மேற்கொள்ளும்போது ஃபிட்டாக இருக்க இந்த முகக்கவசம் அணியலாம்.

குளிக்கும்போது இந்த பாகங்களை சுத்தம் செய்யாமல் அலட்சியம் காட்டுகிறீர்களா? இனியாவது அக்கறை செலுத்துங்கள்..!

குறிப்பு : எந்த முகக்கவசம் அணிந்தாலும் மூக்கு, வாய் மற்றும் தாடை மூடுமாறு இருக்க வேண்டும். இடைவெளி இருக்கக் கூடாது.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading